Site icon தமிழன் சங்கர்

அடிமைத் தமிழா!

அடிமைத் தமிழா!
உன் பிள்ளை என்ன செய்தான்!
ஆரியன் ஆண்டுக் கொழுத்தான்
தெரிகிறது,
திராவிடன் அண்டிக் கெடுத்தான்
தெரிகிறது,
தமிழா!
நீ தூங்கவில்லை
மயங்கிக் கிடக்கிறாய்,
இந்தியம்,ஒற்றுமை, தேசபக்தி
இது
உனக்கு மட்டும் தானா!
மாற்றான் ஆள
நீ
மட்டும்
சேவை செய்யும் சேவகனா?
நீ
அடிமையாகிவிட்டுப்
போ
உன்
தலைமுறையை
அடிமைப்படுத்ததே!
-தமிழன் சங்கர்(4/28/2020)

Copyright secured by Digiprove © 2020All Rights Reserved  
Exit mobile version