Site icon தமிழன் சங்கர்

ஆத்திசூடி – கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.   

“ஆத்திசூடி அமர்ந்த தேவன்” என்று சமணர்கள் தங்கள் சமயத்தவர்களின் தமிழ்க்கொடை என்று வழிவழியாகக் கொண்டாடும் தேவர் பார்சுவநாத தீர்த்தங்கரர் ஒரு வரலாற்று நாயகர். போதி மர நிழலில் புத்தர் ஞானம் பெற்றதுபோல, ஆத்தி (வடமொழியில் தாதகி என்பர்) மர நீழலில் தவஞ்செய்து ஞானம் அடைந்தவர். இருவரும் காசி அருகே மகத மண்டலத்திலே கி.மு. 6-5 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள். சூடுதல் என்றால் சூழ்ந்து கவிந்து இருத்தல் என்ற பொருளைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். ஆத்திசூடி தீர்த்தங்கரர் மீதான பாடல் வீரசோழியத்திலும் உள்ளது. மேலும் ஒரு பாடல் அகத்துறையாய் சோழ மன்னன் மீதும் இருக்கிறது. பார்சுவநாதரது அடியாராகிய ஒரு குரவடிகள் சோழமன்னர்களுக்கு ஆத்தியை குலமரமாகப் பரிதுரைத்திருக்கலாம். ஆத்தி சிவனது திருமேனியிலே காட்டும் சிற்பங்களோ, தேவாரமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பல சிற்பங்களில் ஆத்தி தாவரமும், நாகக் குடையும் கொண்டு பார்சுவநாத தீர்த்தங்கரர் விளங்குகிறார். உதாரணமாக, லோர்துவா ஆத்திசூடி: அலங்காரமான ஆத்தி/தாதகி நீழலில் அமரும் தேவன்

ஆத்தி/தாதகி மரத்தின் அடியில் அமர்பவர் பார்சுவநாதர். இந்தியாவில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக ‘ஆத்திசூடி அமரும் தேவன்’ இருக்கிறார். பாம்புக் குடை இருக்கும். பூசைக் காலங்களில் முடிமீதோ, கழுத்திலோ, திருவடிகளிலோ ஆத்திசூடலாம். சில பழைய சிற்பம், சித்திரம் ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் பார்ப்போம். பெருமாளுக்கு துளசி, சிவனுக்கு கொன்றை, விநாயகருக்கு அறுகு, முருகனுக்குக் கடம்பு, … என்பதுபோல இந்த தீர்த்தங்கரருக்கு ஆத்தி.

பார்சுவநாதர்நேமிநாதரை அடுத்துத் தோன்றியவர். கி.மு.எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். 23ஆவது தீர்த்தங்கரர்.  இவர், அரச குலத்தில் தோன்றியவர். நூறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். முப்பது ஆண்டுகள் இல்லற வாழ்வு நடத்தினார்; எழுபது ஆண்டுகள் துறவு வாழ்வு மேற்கொண்டார். உயிர்க் கொலை, சாதிப் பாகுபாடு இவற்றைக் கடுமையாக எதிர்த்தார்.

ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்)

Copyright secured by Digiprove © 2020All Rights Reserved  
Exit mobile version