0

தமிழ்ப் பேசும் திருட்டுப்பயல்!

தமிழனை எதிர் கொள்ள
வீரம்
வேண்டும் மூடனே!

உன் ஈனபுத்தி
பல்லிளிக்கிறது!
உன்
ஆலோசனை வாயை
மூடிகொள்!

தமிழை
நீ
கேடயம்
என்றா நினைக்கிறாய்
உன்
மாய்மாலங்கள்
நீ
மூடன்
என்பதை
நித்தம்
பறைசாற்றிக்
கொண்டிருக்கிறது

காய்ந்துப் போய்
விழும்
சருகுகளிடம்
கேட்டுப்பார்
அது
சொல்லும்
ஆயிரம் கதைகளை,
ஆயிரம்
ஆட்டம் போட்டன்
அடக்கம்
செய்ய ஆளில்லை!

எங்கள் இனஅழிப்பு
செய்தி
உனக்கு
இன்பமாய் இருக்கிறதா!
நீரோ மன்னன்
போல்
பிடிலா வாசிக்கிறாய்…

உன்
அரசியல்
கூத்துக்கள்
கூத்தடிகளிடம்
செல்லும்
மானத்தமிழர்களிடம்
இல்லை!

ஈனனே,
தமிழ்ப் பேசினால்
நீ
தமிழன் இல்லை!
குறளைப் பேசுவதால்
நீ
தமிழன் இல்லை!
உன்
அகங்காரம்
உன்
ஊழிக்காலம்
போய்த்தொலை!!!
உன்
எச்சிலுக்கு
அடிபணியும்
ஈனர் கூட்டம்
வாழ்த்துச் சொல்ல!!!

உனக்கெல்லாம்
ஒரு
கவிதையா
வெட்கித்துப் போகின்றேன்…

-தமிழன் சங்கர் (5/17/2020)

தமிழன் சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!