0

ஊழலின் தந்தை! திராவிடத்தின் திணறல்!

Image

திருட்டு ரயிலேறி அரசியலில் கரை ஒதுங்கிய கருணாநிதியின் பிறந்த நாளாமே… ஒரு பதிவு போடவில்லை என்றால் தமிழனுக்கு அது இழுக்கல்லவா… கருணாநிதியின் தமிழின துரோகம் தானே பல திராவிட, ஆரிய சூழ்ச்சிகளைப் பற்றி அறிந்து தெளிய செய்தது.

கருணாநிதி தமிழர்களுக்கு என்ன கொடுமைகளைச் செய்தார் என்று பார்த்தால், நாம் புதிதாக எதையும் படிக்கவோ எழுதவோ தேவையில்லை தமிழர்களே…

“பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இலங்கை நாட்டிற்கு விடுதலை கிடைத்த பின்னரும் அங்கு வசிக்கும் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். எனவே தான், இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து 1980-களிலிருந்து பல்வேறு இலங்கை தமிழ் அமைப்புகள் ‘சுயாட்சி அந்தஸ்து”, ‘தனி ஈழம்’ எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தன. 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராகத் திரு. மகிந்தா ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கே தமிழ் நாட்டில் 2006-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் திமுகத் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன் 2006-ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில் ‘ஈழத் தமிழர்கள் அமைதி நிறைந்த நல்வாழ்வுரிமை பெறுவதற்கு வழி காண உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ எனத் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அவர்கள் செய்தது என்னவோ இதற்கு எதிர்மறையான செயல்களைத் தான். திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி 2004 முதல் மத்தியிலே நடைபெற்று வந்தது. இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 2008-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும், இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும்,

இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. இவை அனைத்தும் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக-விற்கு நன்கு தெரியும். இருப்பினும், கருணாநிதி இதனைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவிடமிருந்து ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை, 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டுத் துவக்கத்திலும் இலங்கை தமிழர்களைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இதற்குக் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை திமுக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் அப்போது பல முறை வற்புறுத்தினேன். ஆனால் இதைச் செய்வதற்கு மனம் இல்லாமல் எந்த நடவடிக்கையையும் திரு. கருணாநிதி எடுக்கவில்லை. மக்களை ஏமாற்றும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டம்,சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்,தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்,மனித சங்கிலி போராட்டம்,பிரதமருக்கு தந்தி,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா என்ற வெற்று அறிவிப்புகளுடன் ராஜிநாமாக் கடிதங்களைத் தானே பெற்று வைத்துக் கொண்டது; இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு எனப் பல்வேறு நாடகங்களை நடத்தி,இறுதி நாடகமாக “போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்; என்று அறிவித்துக் கடற்கரையில் 3 மணி நேரத்திற்கும் குறைவாகப் படுத்துக் கொண்டு உண்ணாவிரத நாடகத்தை முடித்துக் கொண்டார்.

Image

அவ்வாறு முடிக்கும் போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டு விட்டது; என்ற செய்தியை ஊடகங்களுக்குத் தெரிவித்தார் திரு. கருணாநிதி. போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று இவரது பேச்சைக் கேட்டு பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் வெளியே வந்தனர். இலங்கை ராணுவம் அவர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்தது. குண்டு மழைக்கு விலக்கு அளிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் கூடக் குண்டுகள் வீசப்பட்டுத் தமிழர் இனப் படுகொலை நடத்தப்பட்டது.3 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட திரு. கருணாநிதி, இலங்கையில் தமிழர்களின் மீதான போரை நிறுத்தி விட்டதாக மத்திய அரசு தனக்குத் தெரியப்படுத்தியதாகவும், தான் அவ்வாறு ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் சொல்லி வந்தார். உயிர் பிழைத்த தமிழர்கள் எவ்வித வசதியும் இல்லாமல் ராணுவ முகாம்களில் கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டனர். தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் திட்டமிட்டு நடைபெற்றது.

Image may contain: 1 person

ஆனால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் திரு. கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்குச் சென்று, அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் விருந்துண்டு பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு இந்தியா திரும்பி, இலங்கை தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டனர்.சில மாதங்களுக்கு முன் இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினரான திருமதி அனந்தி சசிதரன் இறுதிப் போர் உச்சகட்டத்தில் இருந்த 2009-ஆம் ஆண்டுமே 16-ந் தேதி இரவு திரு. கருணாநிதியின் மகள் கனிமொழியிடம், தனது கணவர் சசிதரன் போனில் பேசியதாகவும், அப்போது திருமதி கனிமொழி, அவர்களைச் சரணடைந்து விடும்படியும், அவர்களது விடுதலைக்குத் தாங்கள் உத்தரவாதம் தருவதாகவும் சர்வதேச அளவில் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளார். அதை நம்பியே சரணடைந்த ஈழத் தமிழர்கள் பலரும் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போய் விட்டனர்என்ற மிகப் பெரும் குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார். இங்குள்ள தமிழருக்கு மட்டுமல்லாமல் இலங்கை தமிழருக்கும் இவ்வாறு துரோகம் இழைத்தவர் தான் கருணாநிதி”

Image

மேலே உள்ள தகவல் செல்வி செயலலிதா உயிருடன் இருந்த போது பேசியது, ஆயிரம் குறைகள் செயலலிதா மேல் இருந்தாலும் தமிழின துரோகம் என்றால் கருணாநிதி தான் இனி தமிழர்கள் மனதில் தங்குவார்.

Image may contain: 4 people

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

கொடுமை என்ன என்றால் இந்தத் திருக்குறளுக்கும் கருணாநிதி பொழிப்புரை எழுதியிருக்கிறார், அதை முட்டாள் தமிழர்கள் வாசித்துக் கொண்டிருக்கின்றனர்.

Image

இப்பொழுது திருக்குறளுக்கு வருவோம், கருணாநிதியின் தாய் மட்டுமல்ல மனிதாபிமானம் உள்ள எந்த மனிதர்களும் கருணாநிதியின் துரோகத்தை மன்னிக்க மாட்டார்கள்.

திமுகக் குடும்பம் கருணாநிதியின் பிறந்த நாளை கொண்டாடும் வரை, நாங்கள் அந்த நாளை தமிழின துரோக நாளாக நினைவுபடுத்திக் கொண்டே இருப்போம்.

#HBDFatherOfCorruption
#தமிழினத்துரோகிகருணாநிதி
#UniversalThiefKarunanidhi
#FatherofCorruption
#உபிஸ்_திராவிடன்ஸ்!

தமிழன் சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!