Site icon தமிழன் சங்கர்

திராவிட அரசியலின் உச்சபட்ச அடாவடி!

YouTube Poster

தீரன் திருமுருகன் அவர்கள் ஒரு பெண்ணுடன் பேசும் கேட்பொலி (Audio Clip) பகிரியில் (Whatsup) பகிரப்பட்டிருந்தது. ஒரு வழக்கறிஞர் என்கின்ற முறையில் அவர் மிகவும் நிதானமாகத் தான் பதிலளித்திருந்தார், பேசிய பெண்ணின் தோரணையும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் தீரன் அவர்களைக் காயப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது.

ஈழத்தில் திராவிடர்கள் துரோகம் செய்யாமல் இருந்திருந்திருந்தால் அவர்கள் சொல்லும் வீரபாண்டிய கட்ட பொம்மன் கதையை நாமும் வாயை மூடிக் கேட்டுக் கொண்டிருப்போம். இந்தப் பதிவு வீரபாண்டியனா இல்லை கெட்டி பொம்மலுவா என்பதைப் பற்றி அல்ல, ஏன் எனில் வீரபாண்டியன் என்கின்ற பெயர் கெட்டி பொம்மலுக்கு எப்படி வந்தது என்கின்ற வரலாறு தோண்டி எடுக்கப்பட்டுவிட்டது.

தமிழ்வாணன் அவர்கள் எழுதிய “கட்டபொம்மன் கொள்ளைக்காரன்” என்கின்ற புத்தகம், நாம் வாய் பிளந்து பார்த்து ரசித்த நடிகர் திலகம் சிவாசி அவர்களின் “வீர பாண்டிய கட்டபொம்மன்” திரைப்படத்தை ஒத்து இருக்காது. அடிமைகளாய் இருக்கும் தமிழர்களில் திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளவது என்பது திராவிடத்திற்குக் கைவந்த கலை.

தமிழன் இனவெறி இல்லாதவன் தமிழ் மொழியின் மீது தீராத காதல் உடையவன் என்கின்ற ஒரே காரணத்தால் தமிழன் மாற்று மொழியினராலும் இனத்துரோகிகளாலும் மனத்தோடு தமிழ் மண்ணில் வாழ முடியாத அளவிற்குச் சிறுமை படுத்தப்படுகிறான்.

கெட்டி பொம்மலு கூட்டத்திற்கு இந்தத் திமிர் எங்கிருந்து வருகிறது ஆள், அம்பு, சேனை என்று அமைப்பாகத் தமிழ் மண்ணில் வாழ்ந்துக் கொண்டிருப்பதால் தமிழர்களைச் சீண்டிப்பார்க்க எண்ணுகிறது.

ஒரு பெண்ணாக இருந்தாலும் தரமற்ற வார்தைகளைப் பயன்படுத்தியதை மானத்தமிழர்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

தீரன் மிகப் பொறுமையாகப் பதில் அளித்துத் தமிழர்களின் மாண்பை காப்பாற்றிவிட்டார், உங்கள் பொறுமைக்கு மானத்தமிழானாய் என் பாராட்டுக்கள்!

கெட்டி பொம்மலு கூட்டம், எங்கள் கனக சுப்புரத்தினத்தின் இந்த வரிகளை மட்டும் கவனத்தில் கொள்ளட்டும்.

“எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே,
இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே,
செங்குருதி தன்னில் தமிழ்த்தன்மை வேண்டும்,
சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்.”
-கனக சுப்புரத்தினம்

Exit mobile version