Site icon தமிழன் சங்கர்

தமிழர் நாகரீகம் உங்களுக்குக் கேலிக் கூத்தா!

உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே, என்னுடைய எளிமையான கேள்விக்கு உங்களில் யாருக்கேனும் பதில் இருந்தால் உங்கள் கருத்துகளைக் கீழே உள்ள கருத்துரைகளில் (Comments section) பதிவிடுங்கள். தமிழர்கள் நிலப்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட கீழடியை தமிழர்கள் ஏன் “திராவிட நாகரீகம்” அல்லது “வைகை நதிக்கரை நாகரீகம்” என்று சொல்ல வேண்டும்.

தமிழர் நாகரீகம் உங்களுக்குக் கேலிக் கூத்தா! | TamilanSankar.com

திராவிடக் கூட்டம் நம்மை இப்படி அழைக்கச் சொல்வதில் இருக்கும் நுண்ணிய அரசியல் என்ன, நாம் தமிழர்கள் என்பது உலகறிந்த விடயம், நம் நிலத்தில் புதையுண்ட நகரம், நம் முன்னோர்களின் வாழ்வியல் எச்சம், இதைத் தமிழர் நாகரீகம் என்று நாம் மார்த்தட்டி சொல்ல வேண்டும், அதை விடுத்து, தமிழர்களிடம் ஓட்டு வாங்கி அரசியல் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, போலி ஆரிய திராவிட எதிர்ப்பு நாடகங்களை நடத்திக் கொண்டு, தமிழர்களை எத்திப் பிழைக்கும் ஆரிய திராவிடக் கூட்டுக்களவாணிகளைத் தமிழர்கள் நாம் இனங்காண வேண்டும்.

Dr B. S.அரிசங்கர் Dr T.சத்தியமூர்த்தி , PS சிறீராமன் இந்த மூன்று பேரும் தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் இவர்களுக்கும் தமிழர்களுக்கும் என்ன பிரச்சனை, இதில் ஒருவர் கீழடி அகழ்வாராய்ச்சியை தடுக்க முயற்சிக்கும் இந்திய தொல்லியல் துறையை வெளியேற்றி விட்டு தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டு வரும் கீழடி ஆய்வுகளைச் சந்தேகிக்கும் படி சர்வேதேச பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறார், அதை மற்றொருவர் வழிமொழிகிறார். மூன்றாவது நபர் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பொருட்களும் கிடைக்கவில்லை என்று அந்த ஆய்வை இழுத்து மூட முயற்சி மேற்கொண்டுள்ளார்.

ஒன்று மற்றும் புரிகிறது ஆரிய திராவிடக் களவாணிகள் தமிழர்களைக் கைப்பாவையாக நடத்திக் கொண்டிருக்கின்றனர், தமிழர்கள் விழிக்கவில்லை என்றால் நமது அடையாளங்களை மாற்றானுக்குத் தாரை வார்க்க நேரிடும்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பது பழமொழி… நினைவில் நிறுத்துங்கள் தமிழர்களே!

Exit mobile version