Site icon தமிழன் சங்கர்

ரூம் போட்டு சிந்திச்ச EIA 2020 இதற்கு தானா!

பேரு என்னவோ Environmental Impact Assessment 2020 ஆன அதுக்குள்ள இவர்கள் வைத்திருக்கும் சரத்துக்குள் தான் நம்மை வியப்படைய வைக்கிறது. எந்த ஒரு குற்றமும் நடக்கும் முன்னர்த் தடுக்கப்படவேண்டும். இதிலுள்ள சரத்துபடி குற்றம் செய்தவனே தேவை இருந்தால் குற்றத்தை பற்றிப் பதிவிட்டுக் கொள்ளலாம் என்கின்ற ரீதியில் எழுதி வைத்துள்ளனர். இந்த அதிபயங்கரச் சிந்தனையாளர்களிடம் நாம் சிக்கிக் கொண்டு படும் துயரம் கொஞ்சம் நஞ்சமல்ல.

ரூம் போட்டு சிந்திச்ச EIA 2020 இதற்கு தானா | @TamilanSankar.com

பொய்த்துப்போன வளர்ச்சி எனும் சித்தாந்தங்களை இன்னும் இவர்கள் வியாபாரமாகிக் கொண்டிருப்பது இவர்கள் மக்களை எவ்வளவு முட்டாளாகக் கருதுகின்றனர் என்று தெளிவுற தெரிகிறது. நாம் இயற்கை வளங்களைக் காப்பாற்றுங்கள் என்று கதறினால் இவர்கள் காதில் அது தாலாட்டு பாடலாக ஒலிக்கும் போல் தெரிகிறது.

மக்களைத் தெளிவுபடுத்த வேண்டிய அரசாங்கம் மக்களுக்கு எதிராகத் திட்டங்களைக் கொண்டு வந்து அதையும் மக்கள் புரிந்து கேள்வி எழுப்ப முடியாத அளவிற்குக் குறைந்த கால அவகாசம் கொடுப்பதெல்லம் என்ன ஒரு வில்லங்கதானம். இதற்கா மக்கள் ஓட்டுகள் போட்டு அவர்களுக்குப் பதவிகளைக் கொடுத்தனர்.

ஒன்று மட்டும் புரிகிறது மக்கள் பெரும் போரட்டம் செய்து வெளிப்படையாகப் போராட்டக்காரர்களைக் கொள்வது பெரும் பிரச்சனையாக உள்ளதால் கேள்வியே கேட்க முடியாத அளவிற்கு இது போன்ற திட்டங்களைப் பெரு முதலாளிகளின் வளர்ச்சிக்கு உதவிட அரசாங்கங்கள் துணிந்துவிட்டன.

ஏற்கனவே சுற்றுசூழல் துறை சரிவர இயங்குவது கிடையாது EIA 2020 போன்ற செயல்பாடுகள் மக்களின் குரல்வளையை நசுக்கி பெரும் பணக்கார நிறுவனங்களை வளர்த்து விட நம் இயற்கை வளங்களை எந்தத் தங்கு தடையின்றிச் சூறையாட மட்டுமே பயன்படும். நம் அப்பன்,பாட்டன் எல்லாம் அனுபவித்த இயற்கையை நம் பேரன்கள் அனுபவிக்கப் போவதில்லை என்று மட்டும் திண்ணமாகத் தெரிகிறது.

EIA 2020 யை முழுமையாக எதிர்ப்போம் அரசாங்கங்கள் மக்களுக்குத் தானே அன்றிப் பெரு முதலாளிகளுக்கு இல்லை என்பதைப் பதவிகளில் உட்கார்ந்து கொண்டிருக்கும் கோமாளிகளுக்கு உணர்த்துவோம்.

மண்ணை காக்கும் மகத்தான் பணியில் அனைவரும் இணைவோம் #TNRejectsEIA2020
இன்றே மின்னஞ்சல் அனுப்புங்கள் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு :- eia2020-moefcc@gov.in

Exit mobile version