Site icon தமிழன் சங்கர்

வனிதா,லக்குமி,லூலூ, சாலினி இவர்களா நமக்கு உதாரணங்கள்!

இவர்களை பற்றியா பேசுவது என்று பலமுறை சிந்தித்தாலும் நமது சமூகத்தில் பெண்கள் இருக்கும் நிலையை கருதி பேசுவது என்கின்ற முடிவு உந்தி தள்ளியது. பெண்ணியம் என்கின்ற தத்துவம் பிறந்ததாக ஐரோப்பியர்கள் சொல்வது 1792. பிரெஞ்சு புரட்சியை ஒட்டி ஆங்கிலேய சிந்தனைவாதிகளின் கருத்துக்குப் பதிலளிக்கும் விதமாக Mary Wollstonecraft என்பவர் எழுதிய A Vindication of the Rights of Woman என்பது தான் ஐரோப்பியர்களின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் முதல் பெண்ணியத் தத்துவத்தின் தோற்றம்.

YouTube Poster

இன்றைய உலகம் ஐரோப்பியர்களின் கண்களில் தான் வரலாற்றைப் பார்க்கும் அது பொதுவான குறைபாடு, நமது பெண்புலவர்கள் பட்டியலே சொல்லும் தமிழர் சமூகம் எந்த அளவிற்குப் பெண்களை மதித்திருக்கிறது என்று நமது இலக்கியங்களில் இருக்கும் பெண் ஆளுமைகளின் காதல் வீரம் எதற்கும் சளைத்ததல்ல.

செங்கொடி,அனிதா என்று நமது இன்றைய பெண்கள் உயிரையும் துச்சமாகி சமூகத்தில் அதிர்வலைகளை உருவாக்கியவர்கள். ஈழத்து பெண்புலிகளைப் பற்றிப் பெரும் பெரும் காவியங்களை நாம் இயற்றலாம் அவர்கள் அர்ப்பணிப்பு அப்படி.

இன்று ஊடகங்களில் முன்னிலை படுத்தப்படும் வனிதா, இயக்குனர் இலக்குமி மற்றும் சமூகச் சீர்கேட்டை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பும் ஈவேரா பேத்தி லூலூ போன்றவர்களா நமது பெண்களின் பிரதிநிதிகள். உண்மையில் அப்பாவி பெண்கள் பாவம், அவர்கள் சார்பாகப் பேசுகின்றோம் என்று வரும் முக்கால்வாசி பெண்களின் சமூகப் பார்வை மிகக் கொடுமையாக இருக்கிறது.

தமிழர்களை ஏமாற்றிய திராவிடத் தத்துவமே பொய் எனும் போது அதன் உள்ளீடாக வரும் பெண்ணியப் புரட்சி என்கின்ற பெயரில் லூலூ,தமிழச்சி பெயரை சொல்வதற்குச் சங்கடமாக இருக்கிறது,என்ன செய்வது அப்படி ஒரு பெயரை வைத்துக் கொண்டு தான் பல கருமத்தை புரட்சி என்கின்ற பெயரில் அந்த நபர் பிரெஞ்சு நாட்டில் இருந்து கொண்டு செய்துகொண்டிருக்கிறார், மேலும் மனநல மருத்துவர் சாலினி போன்றவர்கள் தனது வக்கிரங்களை ஈவேரா புரட்சிகளாகத் தமிழ் பெண்களிடம் விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

தமிழ்த் திரையுலகில் தமிழ் நடிகைகளை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம் அந்த அளவிற்கு நமது பெண்கள் தமிழ் திரையுலகின் திராவிட ஆணாதிக்கத்தைப் புறந்தள்ளி இருக்கிறார்கள். இன்று திராவிடப் போதையில் திராவிடப் புரட்சி பேசும் பெண்கள் நிச்சயம் நமது தமிழ்ப் பெண்களுக்குப் பிரதிநிதிகள் இல்லை. ஊடகத்தின் மாயவலையில் தமிழ்ப்பெண்கள் விழுந்து விடாதீர்கள்.

என்னடா இது வனிதா,லக்குமி,லூலூ என்று வந்தோம் அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்றால் உண்மையில் அவர்களைப் பற்றிப் பேசுவது நம்மையே நாம் திட்டிக்கொள்வது போன்றது. நாம் செய்வதற்குப் பல வேலைகள் உள்ளது அதைச் செய்வோம்.

Exit mobile version