Site icon தமிழன் சங்கர்

கவுத்திட்டீயே அண்ணாமலை விவசாயிகள் கதறலா!

தீடீரென்று ஒருவர் புகழ் பெற்றால் நாம் அவரைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டும் என்கின்ற விதியை மெய்பித்துவிட்டார் முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை, பொது ஊடகங்கள் அவர் இதைச் செய்கிறார் அதைச் செய்கிறார் நேர்மையானவர் அப்படி இப்படி என்று புகழ்ந்து தள்ளிய போது தெரிந்து விட்டது பழைய கள்ளை புதிய மொந்தையில் ஊற்றித் தருகிறார்கள் என்று, ஒரு காலத்தில் மக்கள் அரசியல் புரிதல் இல்லாத போது இயல்பாய் நடப்பதை போல் இருந்த இது போன்ற நிகழ்வுகள் எல்லாம் மிகவும் அநாகரீகமாக அருவெறுப்பாக மக்களால் பார்க்கப்படுகிறது.

கவுத்திட்டீயே அண்ணாமலை விவசாயிகள் கதறலா! | Annamalai IPS joined BJP | TamilanSankar.com


சமீபத்தில் ஆட்டுக்குட்டிகளைத் தூக்கிக் கொண்டு விவசாயத்தை ஆதரிப்பது போல் பரப்புரை செய்யப்பட்ட அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திரியும் ஒரு கூட்டம் அவரைத் தமிழ்நாட்டைக் காக்க வந்த தெய்வம் என்பது போல் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

அவர் வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்களை இப்போது பார்ப்போம், நான் எப்போதுமே பெருமைமிக்க #கன்னடர். பிறந்தது வேறு பக்கம் இருக்கலாம் தமிழகத்திலிருந்து, நான் முதல் முறையாகக் கர்நாடகா வந்தபோது, தமிழ்நாட்டில் மிஞ்சிப் போனால் ஒரு 300 பேருக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கும். அதுவும், பள்ளியில் படித்தவர்கள், கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள். அவ்வளவுதான். ஆனால், கர்நாடகா வந்தபிறகு எனது பணி திறமையை மட்டுமே நீங்கள் பார்த்தீர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று நீங்கள் பார்க்கவில்லை.. காவிரி பிரச்சினை வந்தபோது என்னை வேறு நபராக நீங்கள் பார்க்கவில்லை.. நீங்கள் என்னை #தமிழனாகப் பார்க்கவில்லை.. அண்ணாமலை என்ற போலீஸ் அதிகாரியாகத்தான் பார்த்தீர்கள்.

எனது #மாநிலத்தில் கூட இந்த அளவுக்கு மரியாதை கொடுத்திருப்பார்களா என்றால் இருக்காது என்றுதான் நினைக்கிறேன்.

எனது உயிர் இருக்கும் வரை, எனது உடலில் கடைசி மூச்சு இருக்கும் வரை, நான் ஒரு பெருமைமிக்க #கன்னடன்.

இது தான் அவர் உரைத்தது, இப்பொழுது நமது கேள்வி என்னவென்றால் ஒரு தமிழன் கர்நாடக அரசாங்கத்தில் வேலை செய்தவுடன் எப்படிக் கன்னடர் ஆகிவிடுகிறார், அங்கு அவர் ஆற்றிய பணிக்கு ஏன் தமிழ்நாட்டு மக்கள் இரத்தினகம்பளம் கொடுத்து அவரை வரவேற்க வேண்டும் அதுவும் அவர் கன்னடர் என்று பெருமை கொள்ளும் போது இஃது என்ன பெரிய விந்தையாக இருக்கிறது.


இப்பொழுது வந்த சேதி என்னவென்றால் அவர் இந்துத்துவா பாரதீய சனதா கட்சியில் இருந்து சேவையாற்ற இருக்கிறாராம், வடக்கே மலர்ந்த தாமரையைத் தெற்கே மலர என்ன என்ன வேலை எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது இந்துத்துவா சக்திகளுக்கு. மே 29 ந் தேதி பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டியில் விவசாயம் செய்யப் போகிறேன் என்று பேச்சு மூன்றே மாதத்தில் பாரதீய சானதாவில் ஐக்கியம் எந்த மாதிரியான நபர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். காவல்துறையில் செய்யமுடியாத எந்தச் சேவையை இவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியாகி செய்யப் போகிறார். இப்படி விவசாயம் செய்ய வந்த மனித புனிதர் அண்ணாமலை IPS சை சங்கீ கூட்டம் அபகரித்ததில் தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து கதற போகிறார்கள். தீடீர் பிரபலங்களை நம்பாதீர்கள் தமிழர்களே!

மீண்டும் சந்திப்போம்…

Exit mobile version