Site icon தமிழன் சங்கர்

என்னடா நடக்குது இங்க DMK IPAC அலப்பறை!

ஒரு காலத்தில் காங்கிரசு கட்சி தமிழ்நாட்டுத் தேர்தலில் ஒரு ரூபாய் கொடுத்துத் தமிழர்களிடம் ஓட்டுக்கு காசு கொடுக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்ததாகச் சொல்வார்கள். தேர்தல் அரசியல் இன்று எந்த நிலைக்கு ஆளாயிருக்கிறது என்று பார்த்தால் அது மிகவும் கவலைக்கு உரிய விடயமாகப் போய் விட்டது. ஒரு கட்சி என்றால் அதன் உயிர்ப்பாகக் கொள்கை இருக்க வேண்டும் மக்களுக்கு அயராது உழைக்க வேண்டும். தமிழனை ஏமாற்ற திரைப்படங்களில் நல்லவன் போல் நடிப்பது ஊரை கொள்ளையடிப்பது என்று வேடமிட்டு வளர்ந்த கட்சிகள் எல்லாம் இன்று என்ன செய்து வெற்றி பெறுவது என்கின்ற நிலைக்குத் தள்ளப் பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் உலவும் சில கட்சிகளுக்குக் கொள்கை என்பதோ மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கின்ற எண்ணமோ பிரதான காரணி கிடையாது. மக்களை எப்படியாவது ஏமாற்றவேண்டும், பெருநிறுவன முதலாளிகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் அது மட்டும் தான் கொள்கை கோட்பாடு எல்லாம்.

எங்களுக்கு (#DMK-IPAC)  வேறு எங்கும் கிளைகள் இல்லை | @TamilanSankar.com


திமுக,அதிமுக,காங்கிரசு,பாரதீய சனதா என்று எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டாலும் மக்களை ஏமாற்றுவதில் யார் வல்லவர் என்பதில் தான் பெரும் போட்டியே நிலவுகிறது, திமுகாவை பொறுத்தவரை வருகின்ற தேர்தல் வெற்றியே அவர்களின் இருப்பைத் தீர்மானிக்கும் ஆனால் திராவிடத்தை வைத்துக் கட்டிய கோட்டை மனக்கோட்டையாகிவிட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் கீச்சிற்குத் தினமும் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது , அதிமுகவை பொறுத்தவரை MGR , செயலலிதாவின் புகழ் மயக்கத்தில் இன்று வரை வண்டி ஓடியது இனி, இப்போது சங்கிகளின் பிடியில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. காங்கிரசும், பாரதீய சனதாவும் தமிழர்களைப் பொறுத்தவரை தீண்ட தாகத கட்சிகள்.

வெற்றிக்குக் கனி அருகில் இருப்பதாக நினைக்கும் திமுக, நாம் தமிழர் கட்சியின் தமிழர் நலன் சார்ந்த கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரே அரசியல் செய்யமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது, திராவிடத்திற்கு விழுந்த பெரிய அடியில் திமுக எதைச் சொன்னாலும் தமிழர்கள் நம்பும் நிலையில் இல்லை. அமெரிக்க அதிபர் தேர்தல், மோடியின் இந்துத்துவத் தேர்தல் என்று பழைய மாதிரிகளைப் பின்பற்றித் திமுகக் களமிறங்கி இருக்கிறது. அது தான் கார்பொரேட் ஆஃப்ரொச் (Corporate Approach ) கடனட்டை,வங்கி கடன் போல், அடுத்தக் கட்சிகளில் சிறப்பாக வேலை செய்பவர்களின் தகவலை சேகரித்து அவர்களைத் தங்கள் கட்சிக்கு இழுப்பது சும்மா இல்லை பணத்தைக் கொடுத்து தான். IPAC (Indian Political Action Committee) என்கின்ற ஒரு நிறுவனத்தை இதற்குத் திமுகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

திரைப்படக் கவர்ச்சியில் விழுந்த தமிழர்களை இப்போது மோடி பாணியில் சமூக ஊடகம் மூலம் மடைமாற்றும் திமுக முயற்சி இந்தத் தேர்தலில் எதைக் கொண்டுவந்து அவர்களுக்குத் தருகிறது என்று பார்ப்போம்.

Exit mobile version