Site icon தமிழன் சங்கர்

நிர்பயா,மனிசாவின் கதறல்கள் | Justice for Manisha Valmiki | #Manisha | @TamilanSankar.com 

தமிழர்கள் நம் வாழ்வியல் முறைகளைத் திரும்பி பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறோம், அரசனுக்குக் கட்டுப்பட்ட நிலையில் கூடப் பெண்களுக்கு மதிப்பையும் வாழ்வியல் நெறிகளுக்கு அறத்தையும் வகுத்துக் கொடுத்தார்கள் நம் முன்னோர்கள். அறமற்று நிகழும் பல கொடுமைகளை நாம் வாழ்க்கையில் தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம், முகநூலிலும்,பகிரியிலும் மற்ற சமூக ஊடகங்களிலும் பதிவிடப்படும் பதிவுகளில் தீடீர் தீடீர் என்று இதயத்தைப் பதற செய்யும் விடயங்கள் பகிரப்படும் போது நாம் கொடிய மிருகங்கள் உலவும் நாட்டில் இருக்கிறோமா இல்லை நம் முன்னோர் வகுத்துக் கொடுத்த வாழ்வியல் நெறிகளைக் கொண்டு நாட்டில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோமோ என்று குழம்பும் வகையில் தான் அடிக்கடி பல நிகழ்வுகள் நம்மை வந்து சேருகின்றன. துயரமான ஒரு செய்தி பரவும் வேகத்திற்கு நாம் காலத்தைக் கூடக் கணிக்க முடியாது, ஆனால் அதற்குக் கிடைக்க வேண்டிய நீதிக்கு மட்டும் யுகம்யுகமாகக் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

YouTube Poster

வடஇந்தியாவில் சில கிராமங்களில் நடப்பதாக அவ்வப்போது ஏதேனும் மிருகவெறி சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வரும் போது இப்படியெல்லாம் நடக்குமா என்று கோபப்பட்டு நாம் கேட்டால், தமிழ்நாடு எப்படித் தப்பித்தது தெரியுமா இஃது ஈவேரா மண் என்று திராவிடப் புலம்பல்கள் ஒப்பாரிக்கு மத்தியில் போலிப் புகழ்மாலை சூடவரும். திராவிட ஆட்சியில் சாதிவெறி என்று கூகுளில் தட்டி பார்த்தால் அது கொட்டும் பல நிகழ்வுகளைத் தமிழர்களைப் பிரித்தாண்ட சாதிவெறிக் கொடுமைகளை. கீழ்வெண்மணி படுகொலை, காந்தாரி அம்மன் கோவில் குறிஞ்சாங்குளம் படுகொலை, மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை (Manjolai labourers massacre) அது தான்  தாமிரபரணி படுகொலை என பட்டியல் வந்து  தமிழர்கள் மனதை அழுத்தும் திராவிட சாதிவெறி சம்பவங்களை. சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு கொடூரம் தான் மனதை விட்டு அகல மாறுகிறது. ஒரு பெண்ணின் பெயருக்குக் களங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காகப் புனைபெயரானா நிர்பயா என்கின்ற பெயரில் இந்தியாவே பொங்கி எழுந்த சம்பவம் இன்னும் நம் நினைவுகளில் இருந்து மறையவில்லை அதற்குள் உரிமை பறிக்கப்பட்ட குடியை சேர்ந்த பெண்ணை மிருகத்தினும் கொடுமையாய் நடத்திய ஆதிக்கக் குடிகளின் வன்புணர்வு கொடுமை, இந்தியாவில் காட்டுமிராண்டிதனம் எப்படி இரத்தம் ஊற்றி வளர்க்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஆகிவிட்டது.

மனித உயிர் குடிக்கும் வன்புணர்வும், இனப்படுகொலைகளில் முடியும் உரிமைப் போராட்டங்களும், தேர்தல் வெற்றிக்கு நடக்கும் சாதீய படுகொலைகளும் நாட்டை எப்படிச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன என்பதற்குத் தமிழ்நாட்டைச் சுற்றி நடக்கும் விடயங்களை அவதானித்தால் மிகத் தெளிவாகப் புரியும். #justiceforNirbaya,#justiceforManisha என்று நாம் புதிது புதிதாக ஆசுடாக்குகளை உருவாக்கிக் கொண்டே போவோம் மக்கள் அரசியல் தெளிவு பெரும் வரை.

மீண்டும் சந்திப்போம்…

Exit mobile version