Site icon தமிழன் சங்கர்

ஆயுள் சிறைப்பறவையா பேரறிவாளன்? | Dignity and Justice, release Perarivalan | #ReleasePerarivalan

ஒரு நாடு தன்னகத்தே உள்ள அனைத்து தேசிய இனங்களையும் ஒன்றாகக் கருதவேண்டும், அப்படிக் கருதாமல் நீதியில் தவறுமானால் அதன் அமைதித்தன்மை,ஒற்றுமை அனைத்தும் கேள்விக்குரியதாகி விடும், இன்று பேரறிவாளன் உட்பட ஏழு தமிழர்கள் விடுதலை பெரும் பேசுபொருளாக மாறிக் கொண்டிருக்கிறது இதற்கு முக்கியக் காரணம் நீதிதுறையின் இயாலாமையே, இந்த 30 வருட காலச் சிறைத்தண்டனையானது ஒட்டுமொத்த உலகிற்கு ஒரு பாடமாய் மாறிக் கொண்டிருக்கிறது. மனிதாபிமானம் என்கின்ற சொல்லே வேடிக்கை பொருளாக மாறிக் கொண்டிருக்கிறது. பேரறிவாளனை கைது செய்தபோது அதிகாரத்தில் இருந்தவர்கள் எல்லாம் இன்று கண்ணீர்க் காவியம் எழுதிக் கொண்டிருப்பது மனிதநேயம் ஊசலாடிக் கொண்டிருப்பதன் எதிரொலி தான். இனி பேரறிவாளன் கடந்து வந்த துயரப்பாதையைப் பார்ப்போம்.

YouTube Poster

May 21 1991
சிறிபெரும்பதூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.ராஜீவ் காந்தி கொல்லப்படுகிறார் அவருடன் 15 பேர் மரணம் நிகழ்கிறது.

June 06 1991
பேரறிவாளனை, விசாரித்து விட்டுக் காலையில் அனுப்புவதாகப் பெற்றோரிடம் கூறி அழைத்துச் சென்றனர் மத்திய புலனாய்வு துறையினரின் சிறப்புப் புலனாய்வு பிரிவு.

June 19 1991
8 நாட்கள் சட்ட விரோத காவலுக்குப் பின் செங்கல்பட்டு நடுவர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் ஆஜர்படுத்தப்பட்டார்.

August 16 1991
68 நாட்கள் சிபிஐ கொடுமைகளுக்குப் பின் செங்கல்பட்டுக் கிளைச்சிறையில் பேரறிவாளன் அடைப்பு.

January 17 1993
பூந்தமல்லி தனிக்கிளைச் சிறையில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரும் அடைப்பு. சிறை வளாகத்தில் இருந்த தடா சிறப்பு நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் வழக்கு விசாரணை தொடங்கியது.

May 24 1995
தடாச்சட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் வழக்கு அந்தச் சட்டத்தின் கீழே நடத்தப்பட்டு வந்தது

January 28 1998
26 பேருக்கும் தூக்கு உறுதியாகின்றது

1998
மரணத் தண்டனைக்கு எதிராக நீதியரசர் கிருஷ்ணய்யர் குரல் கொடுக்கிறார்

May 11 1999
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.டி.தாமஸ், வாத்வா, காத்ரி அடங்கிய மூவர் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது. அனைவரும் தடாச்சட்டத்திலிருந்து விடுதலை. இருப்பினும் தடா வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை கொடுக்கப்படுகிறது. அதில் 19 பேர் விடுதலை என்றும் 4 பேருக்கு தூக்கு என்றும் 3 பேருக்கு ஆயுள் என்று தீர்ப்புக் கொடுக்கப்படுகிறது.

October 08 1999
தண்டனை பெற்றவர்கள் தொடுத்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

April 25 2000
ஆளுநர் கருணை மனுவை தள்ளுபடி செய்கிறார். திருமதி. நளினி க்கு மட்டும் தண்டனை மட்டும் குறைப்புச் செய்யப்படுகிறது.

2005
சிபிஐ தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், இவ்வழக்கில் இதுவரை கண்டுபிடிக்கவே முடியாத ஒரே விடயம் “யார் வெடிகுண்டு செய்தார்” என்பதே என்று பணி ஓய்வுக்குப் பின் பேட்டி கொடுக்கிறார்.

2008
அண்ணா நூற்றாண்டில் பேரறிவாளனை விடுதலை செய்யக் கிருஷ்ணய்யர் கடிதம் எழுதுகிறார்.

2009
செம்மொழி மாநாட்டை ஒட்டி தண்டனை குறைப்பு வழங்க கோரி பிரதிபா படீலுக்குக் கிருஷ்ணய்யர் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறார்.

August 26 2011
குடியரசு தலைவர் பிரதிபா படீல் கருணை மனுவை தள்ளுபடி செய்கிறார். அதனைத் தொடந்து மூவரையும் 09.09.2011 அன்று தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டது.

August 28 2011
தமிழகமெங்கும் பெரும் போராட்டம் வெடிக்கிறது. செங்கொடி என்கிற இளம்பெண் தீக்குளித்துத் தியாகம் செய்கிறார்.

August 30 2011
தூக்கு நிறைவேற்ற இருப்பதைச் சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்கிறது.

September 02 2011
நீதிபதி தாமஸ் ஏசியன் ஏஜ் நாளேட்டில் கட்டுரை கொடுக்கிறார். தான் தவறிழைத்து விட்டதாக உருக்கம்.

2012
தீர்ப்பில் பிழை நேர்ந்துவிட்டதால் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என நீதிபதி தாமஸ் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் மீண்டும் பேட்டி கொடுக்கிறார்

November 22 2013
பேரறிவாளனின் ஒப்புதல் வாக்கு மூலத்தைத் தான் முழுமையாகப் பதிவு செய்யவில்லை. பேரறிவாளனுக்கு ராஜீவ்காந்தி கொலை சம்பவம் முன்கூட்டியே தெரியாது என்பதை நான் பதிவு செய்யவில்லை எனப் பேட்டி கொடுக்கிறார் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி தியாகராஜன். அவர் உயிர் வலி ஆவணப்படம் ஊடாக ஒப்புதல் வாக்குமூலத்தைப் பதிவு செய்கிறார்

February 18 2014
தண்டனை குறைப்புச் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு. உரிய அரசு 432 Cr.P.Cயின் கீழ் விடுதலை செய்யப் பரிந்துரை செய்கிறது உச்ச நீதிமன்றம்.

February19 2014
அதனைத் தொடர்ந்து ஏழு பேரையும் விடுதலை செய்யத் தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றுகிறார். அது தொடர்பாகக் கருத்து கேட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்.

February20 2014
தமிழ் நாட்டு முதல்வர் கடிதத்திற்கு எதிர்வினையாக மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்று ரிட் மனு தாக்கல் செய்து விடுதலைக்குத் தடை பெற்றது

April 25 2014
வழக்கு ஐவர் அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது

December 02 2015
சிபிஐ விசாரித்த வழக்குகளில் 432 Cr.P.Cயின் கீழ் விடுதலை செய்ய 435 ன்படி மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கொடுக்கிறது. மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்றவர்களை மாநில அரசு விடுதை செய்யமுடியாது எனவும் தீர்ப்பு வெளியாகிறது.

February 2016
உச்ச நீதிமன்ற ஐவர் அமர்வு தீர்ப்புக்கு பின்னர் மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சட்டப்பிரிவான ஆயுத சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத் 14 மாதங்கள் முன்னதாக மாநில அரசால் விடுதலையாகிறார் என்பதைச் சுட்டிக்காட்டி அதிருப்தி அடைகிறது தமிழ் நாட்டு.

March 24 2016
இது குறித்து ஆர்டிஐ மனு ஒன்றை தாக்கல் செய்கிறார் பேரறிவாளன்.

March 02 2016
தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் மத்திய அரசின் கருத்து கேட்டு புதிய கடிதம் ஒன்றை எழுதுகிறார்

January 23 2018
தமிழ் நாடு முதல்வரின் இரண்டாவது கடிதம் குறித்து மூன்று மாதங்களில் பதில் தரும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

April 18 2018
மாநில அரசின் விடுதலை முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தரமுடியாது என உள்துறை இணை செயலர் கடிதம் ஏழுதுகிறார். ஆனால் மாறாக மத்திய அரசின் அமைச்சரவை கூடி முடிவெடுத்து அதன்பேரில் குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் வழியே செய்தி பரப்பப்பட்டது.

July 2018
இதுகுறித்து விளக்கம் கேட்டுக் குடியரசு தலைவர் அலுவலகத்திற்கு ஆர்டிஐ மனு அனுப்பப்படுகிறது

September 06 2018
ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூவர் அமர்வு, அரசமைப்பு உறுப்பு 161 யின் கீழான பேரறிவாளனின் விடுதலை கோரும் மனுவை மாநில அரசு பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டது

September 09 2018
மாநில அமைச்சரவை கூடி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளன் மற்றும் ஆறு பேருக்கும் விடுதலைக்குப் பரிந்துரை செய்து 7 தனித்தனி கோப்புகளாக ஆளுநரின் கையெழுத்துக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு

September 24 2018
அற்புதம்மாள் ஆளுநரை நேரில் சந்தித்து விடுதலை கோப்பில் கையெழுத்திட வேண்டி கொண்டார்

September 09 2019
ஆளுநரை கையெழுத்திட தமிழகமெங்கும் அற்புதம்மாள் அறைகூவலால் பெரும் மனித சங்கிலி போராட்டம் நிகழ்த்தப்பட்ட ஆளுநருக்கு அழுத்தம் தரப்பட்டது

January 21 2020
நீதியரசர் நாகேஸ்வர ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு பேரறிவாளன் தொடுத்த வழக்கில், மாநில அரசு பேரறிவாளனின் உறுப்பு161 மனுவின் மீது என்ன நடவடிக்கை எடுத்தது என்று அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக் கொண்டது

January 25 2020
ஜனவரி 21 2020 உச்ச நீதிமன்ற இட்ட உத்தரவின் அடிப்படையில் விரைந்து தனது மனுவினை பரிசீலிக்க வேண்டும் என்று கூறி ஆளுநருக்கு பேரறிவாளன் நினைவூட்டல் கடிதம் ஒன்றை அனுப்பினார்

February 11 2020
தமிழக அரசு சார்பில் தாங்கள் செப்டம்பர் 09 2018ஆம் அன்று தீர்மானம் நிறைவேற்றி விட்டதாகவும், கோப்பு ஆளுநரின் கையெழுத்திற்காகக் காத்திருக்கிறது என்றும், ஆளுநருக்கு தங்களால் அழுத்தம் தர முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது தமிழக அரசு. அப்பொழுது தலையிட்ட நீதியரசர்கள் ஆளுநர் ஏன் தாமதம் செய்கிறார் என்பது குறித்து மாநில அரசு விளக்கம் கேற்க வேண்டும் என்று வாய் மொழி உத்தரவிட்டனர்

March 20 2020
உச்ச நீதிமன்ற வாய்மொழி உத்தரவின் அடிப்படியில் உள்துறை செயலாளர் ஆளுநர் மாளிகைக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியதாகவும். அதற்கு ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் கடிதம் பெற்றுள்ளதாகவும் சட்ட பேரவையில் சட்ட அமைச்சர் அறிவித்தார். ஆளுநர் மாளிகை கடிதத்தில் பல்நோக்கு விசாரணை முகைமை (MDMA) இறுதி அறிக்கைக்காகத் தான் காத்திருப்பதாகவும் அதுவரை விடுதலை கோப்பில் எந்த முடிவையும் எடுக்க முடியாது என்று கூறியதை சட்ட பேரவையில் அறிவிக்கிறார்.

September 24 2020
ஆளுநர் விடுதலை கோப்பில் கையெழுத்திட MDMA இறுதி அறிக்கைக்காகக் காத்திருக்கிறார் என்பது பேரறிவாளனுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 30 நாள் பரோல் விடுப்பில் ஆவணப் பூர்வமாகப் பதிவு செய்யப்படுகிறது

November 03 2020
உயர் நீதிமன்ற பரோலை அடிப்படையாககொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள தனது வழக்கில் நீதிமன்றம் விடுதலை தர வேண்டும் என்று கோரி ஓர் இடையீயிட்டு(interlocutary) மனுவினை பேரறிவாளன் தாக்கல் செய்கிறார். அதனை நவம்பர் 23 ஆம் தேதிக்கு விசாரிக்க ஏற்றுக் கொண்டது உச்ச நீதிமன்றம். விடுதலை கோப்பில் கையெழுத்திட தாமத்தமாவதற்கான காரணத்தைக் கேட்ட பொழுது, பல்நோக்கு விசாரணை முகைமை இறுதி அறிக்கையை ஆளுநர் காரணம் காட்டியதாகக் கூறுகிறார் மாநில அரசு வழக்கறிஞர்
அப்பொழுது தலையிட்ட நீதிபதிகள், ஜெயின் கமிஷன் அடிப்படையிலான பல்நோக்கு விசாரணை முகைமையின் அறிக்கைக்கும், ஏற்கனவே வழக்கு முடிந்து தண்டனை பெற்றுவிட்ட மனுதாரரின் விடுதலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அதனைக் காரணமாக ஏற்க முடியாது எனவும் கூறிவிட்டனர். மேலும் இது குறித்து மாநில அரசு ஏன் ஆளுநருக்கு உரிய விளக்கங்களைத் தரவில்லையெனவும் கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம்.

November 23
இந்நிலையில் நவம்பர் 23 அன்று என்ன திருப்பு வழங்க போகிறது உச்ச நீதிமன்றம் என்கிற எதிர்பார்ப்புடன், 29 ஆண்டுக் காலம் சிறையில் வாடும் நிரபராதி பேரறிவாளன் அனைத்து மக்களிடமும் “எனது மனுக்கள் கருணைக்காக இல்லை நீதிக்காக” என்று நீதி வேண்டி காத்து நிற்கிறார்.

Exit mobile version