Site icon தமிழன் சங்கர்

#RajinikanthPoliticalEntry | Why Rajini is not our choice? | நாம் ஏன் ரஜினியை எதிர்க்கிறோம்? | @TamilanSankar.com

நாம் ஏன் ஒரு காலத்தில் ரசித்த ரஜினியை இன்று எதிர்க்கிறோம் என்று தமிழர்கள் ஒவ்வொருவரும் நினைக்கும் தருணம் இன்று வந்திருக்கிறது.

இந்நேரம் நிறையச் செய்திகள் ரஜினியின் அரசியல் முகவரி பற்றி உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கும், ஏதோ கடமைக்கு நானும் ஏதாவது பதிவு போட வேண்டும் என்று நான் இந்த பதிவை போடவில்லை.

#RajinikanthPoliticalEntry | Why Rajini is not our choice? |  நாம் ஏன் ரஜினியை எதிர்க்கிறோம்?

உங்களைப் போல் நானும் கமல்,ரஜினி,விசய்,அசித் என்று நடிகர்களுக்குக் காவடி தூக்கியவன் தான். தமிழர்கள் இயல்பாகக் கலைக்கு மயங்கியவர்கள், நமது இலக்கியங்கள் அனைத்தும் பாட்டுகள் வடிவில் தான் இருக்கின்றன இதுவே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு நமது முன்னோர்கள் எப்படி ஆடிப் பாடி கொண்டாட்ட மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று.
ரஜினியை பொறுத்தவரை ஒரு நடிகராகப் பெரிதும் பாராட்டலாம் அது கூட அவர் நடித்து வெளிவந்த “சிவாஜி” படத்துடன் முடிவடைந்துவிட்டது, அரசியல் என்று எப்பொழுது திரைமறைவில் இந்துத்துவா பாரதீய சனதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு தமிழர் விரோத கருத்துக்களை அவர் பரப்ப ஆரம்பித்தாரோ அன்றே அவரின் பழைய படங்களைக் கூட வெறுப்புடன் பார்க்கும் நிலைக்குத் தள்ளிவிட்டது.

தமிழர்கள் நாம் எந்த மாற்று மொழியினருக்கும் எதிரிகள் இல்லை ஆனால் தமிழ்நாட்டில் வாழும் மாற்று மொழி பேசுபவர்கள் தமிழர்களால் தமிழர் நிலத்தில் உயர்ந்து நமக்கே தலையிடியாய் வருவதைத் தான் நாம் ஒரு காலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
தமிழர் நிலத்தில் பல ஆண்டுக் காலமாய் ஒரு நுண்ணிய அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அஃது என்ன வென்றால் தமிழர் இன உணர்வுள்ள தமிழன் ஒரு நாளும் ஆட்சியின் தலைமைக்கு வந்துவிடக் கூடாது என்பதே.

ரஜினிக்கு வருவோம், தலையைச் சிலுப்பி நடித்தார், மாற்றுமொழியினரின் தமிழ் உச்சரிப்புக்கு தனி வசீகரம் இருக்கும் அஃது இவருக்கும் இருந்தது, உள்ளத்தைக் கொள்ளை கொண்டார் தமிழர்கள் அவரைத் தலையில் வைத்து கொண்டாடினர். அவர் திரும்ப என்ன செய்தார் தமிழருக்கு, அவர் சொல்கிறார் உயரிய முதல்வர் பதவியைக் கொடுங்கள் செய்கிறேன் என்று… தமிழன் வியர்வை சிந்தி அள்ளிக் கொடுத்தது எல்லாம் போதாதா ரஜினி அவர்களே…மராட்டியத்தில் பிறந்து கர்நாடகத்தில் வளர்ந்து தமிழ்நாட்டில் உயரந்த ரஜினியின் வீட்டில் மராட்டிய சிவாஜியின் படம் தொங்கிக் கொண்டிருக்கும். எங்கள் ராசராசசோழன் படம் தொங்கிக்கொண்டிருக்கும் தமிழன் தானே எங்கள் தமிழ்நாட்டிற்கு முதல்வராய் வரவேண்டும் இஃது என்ன மன்னராட்சியா நீங்கள் எங்களை ஆக்கிரமிக்க…

ஆந்திரத்தில் தெலுங்கர் முதல்வர், தெலுங்கானாவில் தெலுங்கர் முதல்வர், கர்நாடகாவில் கன்னடர் முதல்வர், கேரளத்தில் மலையாளி முதல்வர், தமிழ்நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் வரலாம், தமிழுணர்வு கொண்ட தமிழர் மட்டும் அரியணை ஏறி விடக் கூடாது என்பது என்ன ஒரு வினோத மனநிலை.

தனிமனிதனாகக் கூடத் தமிழர் அரசியலில் உங்களுக்கு இடமில்லை எனும் போது நயவஞ்சகமாக ஓட்டை பிரிக்கும் வகையில் களவாணித்தனமாகப் பாரதீய சானதாவின் திட்டங்களுக்கு நீங்கள் நடனமாடுவது காண சகிக்கவில்லை.

உங்களால் இந்தத் தேர்தலில் ஒரு நன்மை விளையப் போகிறது அஃது என்னவென்றால், தமிழர்கள் இனி கண்டவர்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடமாட்டார்கள். முக்கியமாக அரசியலில் குதிக்கப்போகிறேன்,நான் எப்ப வருவேன் எப்படி வருவேன், ஆண்டவன் சொல்றான் போன்ற வசனங்களுக்கு இனி மேல் ஒரு தெளிவு பிறக்கும். உங்களுக்கு ஏற்படும் தோல்வி இனி தமிழர் நிலத்தில் புதிய மாற்றங்களை உருவாகட்டும்.

தொடரும்…

Exit mobile version