Site icon தமிழன் சங்கர்

தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!

நேற்றைய இரு நிகழ்வுகள் என்னைப் பம்பரமாய்ச் சுற்ற வைத்தது ஒன்று அட்லாண்டா தமிழர் பேரவையின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 2021 நிகழ்வு மற்றொன்று அமெரிக்கத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தோழர் அருணபாரதியின் தலைமையில் நடைபெற்ற  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் 2021 இணைய வழி நிகழ்வு.

நமது ரத்த உறவுகள் தமிழீழத்தில் உலக வல்லரசுகளின் துணைக் கொண்டு அடாவடி நாடான இலங்கை நடத்திய மனித பேரழிவான இனப்படுகொலையில் கதறிய கதறல்கள் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தும் நம்மைச் சோர்வடையச் செய்ய வில்லை. வெற்றிக் கோடுகளே கண்ணில் தெரியாவிட்டாலும் ஓடுவதை நிறுத்த மனமும் மறுக்கிறது வலுவிழந்த கால்களும் மறுக்கிறது, கடைசித் தமிழன் இருக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்…
தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!

Exit mobile version