Site icon தமிழன் சங்கர்

The Family Man season 2 – தமிழர் விரோத மூளை மழுங்கிய படைப்பு

இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு விடுதலைப்புலிகளைக் கடந்து சிந்திக்க முடியாத அளவிற்கு அவர்கள் வீரத்தாலும் ஈகத்தாலும் தமிழீழ மண்ணில் விதைக்கப்பட்டுவிட்டனர். இந்திய ஒன்றியமும் சிங்களமும் அவர்களைப் பற்றிய அவதூறு பிரச்சாரத்தை மட்டும் இன்னும் விட்ட பாடாய் தெரியவில்லை. ஆரியனும் திராவிடனும் கைகோர்த்து அமேசான் இணையத்திரையில் விரைவில் வெளிவரவிருக்கும் The Family Man season 2 என்ற தொடரில் தேவையற்று விடுதலைப் புலிகளை பாக்கித்தான் (அரச பயங்கரவாத நாடான இலங்கைக்கு போரில் ஒத்துழைத்த 21 நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று) உளவு அமைப்புடன் இணைந்து செயல்படுவது போல் திட்டமிட்டுக் கதைக்களத்தை உருவாக்கியுள்ளனர். மெட்ராஸ் கபே, புலிப்பார்வை என்று தமிழர்களைத் தீவிரவாத கூட்டம் போல் சித்தரிக்கும் ஆரிய,திராவிடக் கூட்டுக் களவாணித்தனம் இந்த The Family Man season 2 என்கின்ற இந்த தொடரிலும் வந்திருப்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

விடுதலை போராட்டங்கள் வெற்றி அடைந்தால் ஒரு பார்வை, தோல்வியைத் தழுவினால் ஒரு பார்வை என்று சர்வதேசம் பார்க்கும் ஆனால் போராடியவனுக்கு மட்டுமே தெரியும் போராட்டத்தின் வலியும் மதிப்பும்

#FamilyMan2_Against_Tamils

.விடுதலைப்புலிகள் ஆயுதத்தை மவுனித்துப் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தும் அவர்களைச் சீண்டிக் கொண்டிருப்பது உலகத் தமிழர்கள் ஒன்றிணையக் கூடாது எனும் இந்திய மற்றும் சிங்கள அதிகார வர்க்கத்தின் தமிழர் விரோத கொள்கை என்பதை உலகத் தமிழர்கள் அறிய வேண்டும்.
#FamilyMan2_Against_Tamils

Exit mobile version