Site icon தமிழன் சங்கர்

கதை கேளு…கதை கேளு…

கதை கேளு…கதை கேளு… | Best storytellers in TamilNadu | TamilanSankar.com

தமிழ்நாட்டு அரசியல் வெகு காலமாக இரண்டு கட்சிகளை வைத்தே நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழர்கள் ஆதிப் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் ஆதலால் மூத்தோர்கள் கதை சொல்வதும் இளையோர்கள் கதை கேட்பதும் நம் நாடி நரம்புகளில் ஊறிப் போன விடயங்கள். இதன் தொடர்ச்சியாகத் தமிழ் மொழிக்கு என்று ஒரு பிரச்சனை வந்த போது பொங்கி எழுந்த தமிழர்கள் தேசியக்கட்சிகளைப் பழி வாங்க நல்ல கதை சொல்லிக் கட்சிகளைக் கட்டியணைக்க ஆரம்பித்தனர்.

தமிழ் தமிழ் என்று அவர்கள் என்ன என்னவோ கதைகளைச் சொன்னார்கள், தமிழருக்கு ஒரு நாடு கூட அமைந்துவிடுமோ என்னும் அளவிற்கு அவர்களின் கதைகள் இருந்தன. கதை கேட்டு, படம் பார்த்து மூளை மழுங்கிய தமிழர்கள், ஒரு தலைமுறையைக் கடந்து கதைக் கேட்டு கேட்டுச் சலித்துப் போனதால் கடைசியாய் கதை சொல்லிகள் நடத்திய உண்ணாவிரத நாடகத்தோடு தொலைந்த வருடங்களையும், நடந்த நிகழ்வுகளையும் அசைபோட ஆரம்பித்துவிட்டனர்.

அந்தக் கதை சொல்லிகள் யாரென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர்கள் வேறு யாரும் இல்லை, “யார் தமிழர்கள்” என்று தமிழர்களைப் பார்த்து கேள்விக் கேட்டு அவமானப்படுத்தும் திராவிட அயோக்கிய கூட்டம் தான்.

உண்ணாவிரத நாடகம் முடிந்து தமிழர்கள் இனப் படுகொலையில் கொத்துக் கொத்தாதாகக் கரிக்கட்டையானதும் புதிதாய் சில அயோக்கியர்களைக் களமிறக்கியது “புதிய மொந்தையில் பழைய கள்” பழைய அயோக்கியர்கள் விக்கிரமாதித்தன் வேதாளம் போல் புதிதாய் கதை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இவர்கள் இணைந்து நடத்திய கூட்டத்தின் தலைப்பு “பறிபோகும் தமிழின உரிமைகள்”

தூரத்தில் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடல் ஒலிக்கிறது “இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…”

கேட்பதோடு கொஞ்சம் சிந்திப்போம்..

Exit mobile version