இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில்… தமிழன் சங்கர் 4 years ago இற்றைத் திங்கள்இந்நிலவொளியில்இமைதிறந்து விழித்திருந்தும்வேண்டும் இன்பம்எனக்கில்லை…எந்த கதையை சொல்வதிங்க..கரைந்த பொழுதுகளும்கண்ட கனவுகளும்மறுபதிவுசெய்வது போல்மீண்டும் மீண்டும்என்நினைவகத்தைநிறைக்கிறதுநட்ட நடுப் பகலில்யாருமற்றமுத்திரிக்காடுகளில்நான்தேடிக்கொண்டிருந்ததெல்லாம்அந்த மூக்கு நீண்டமுந்திரிப்பழங்களைத் தான்.வெயில் உலர்த்தியஎன் தேகம்ரயில் பாதையோரமரங்களையும்அதுநிழல் கொடுத்ததருணங்களையும்என் நினைவகத்தில்பதிந்திடுமே…நிலா காய்கிறதுஉண்மை தான்நிலா இன்றுகாய்ந்து கொண்டு தான்இருக்கிறது…பாடல்ஒலிக்கும்இந்தத் தருணம்இற்றைத் திங்கள் இல்லைஅதுஅற்றைத் திங்கள்…கான்கிரிட் மின் கம்பங்கள்ஆக்கிரமிக்காதராப்பொழுதுகள்அவை…திடீர் திடீர்என்றுபேருந்து சன்னல் வழியேவெளிச்சம்அவ்வப்போதுஇரவுக்கு வெள்ளையடிக்கும்ஊரடங்கியஅந்த நிலவொளி பாதையில்உறுமிக் கொண்டுஓடும்பேருந்தைத் தவிரஎன் அமைதியைஆக்கிரமிக்கஎந்த வணிகனும்இன்னும் இங்குஇதுவரை வரவில்லைமீண்டும் சொல்கிறேன்இது இற்றைத் திங்கள் இல்லைஇன்பத்தை வாரி இறைத்தஅற்றைத் திங்கள்…என் நிழல் பார்த்துநான் பயந்தாலும்எங்கள் கருப்பசாமிவந்துபயம் போக்கியஅற்றைத் திங்கள் அது…கண்விழித்துபூசை செய்துநடுநிசியில்பயம் தொலைத்தஅற்றைத் திங்கள் அது பொட்டல் வெளிபாதையிலேஅற்றைத் திங்கள்நிலவொளியில்ஓலக்குடிசைதேநீர்க் கடையில்உறவுமுறைகூடிச் சேர்ந்துஇன்பமாய்அள்ளிக் குடித்ததேநீர்க் கதைகள்இங்கே ஏராளம்வாழ்க்கை எனும் விசைப்படகுவேகமாய்இழுத்துவரஅற்றைத் திங்கள்நிகழ்வுகள் எல்லாம்மறுசுழற்சி முறையிலேஇங்குவிதைத்து விடமுடியாதோகலங்கித்தான் போகின்றேன்இற்றைத் திங்கள்இந்நிலவொளியில்கூடித் தான்கதைத்தாலும்மரணித்த வெகுளித்தனம்முழு இன்பம் தராமல்மனதைமுடக்கத்தான்செய்கிறதுவளர்ச்சி வளர்ச்சி என்றார்இன்றோஒளி வெளிச்சம்விழியைப் பதம் பார்க்கஒலி இரைச்சல்காதை பதம் பார்க்கச்சகிப்புத்தன்மையேஇங்குச்சலித்துக் கொண்டுநித்தம் நித்தம் மனிதம்இங்கேமாரடைப்பில் மரணிக்கிறது.இற்றையமனிதத்தின்தேடலெல்லாம்மனிதத்தைநம்மில்சிதைத்துவிட்டால்மீதம் இருப்பதுஅற்றைய நினைவுகளே!அற்றைய நினைவுகளே! Share this: