உலகம் எப்பொழுதும் உண்மையைச் சொல்பவனைச் சும்மா விடாது, கொரோனத் தொற்றுநோய் விடயத்தைக் கூர்ந்துக் கவனித்தால் இது தெளிவாகப் புரியும், சிறிய விடயத்தை ஊதிப் பெரிதாக்குவது என்பது பெரு முதலாளிகளுக்கும் அவர்களின் அடிமை அரசாங்கத்திற்கும் எவ்வளவு எளிது என்பது கடந்த இரண்டு மாத வாழ்க்கையும் இனி வரப்போகும் புதிய வாழ்கை முறையும் நிச்சயம் நிரூபிக்கும். சில மருத்துவர்கள் கேட்பது இது தான், நோய் வந்தவர்களைத் தானே தனிமை படுத்தவேண்டும் ஏன் உலகத்தையே பூட்டி உலக ஒழுங்கையே சீர்குலைக்க வேண்டும், இது மிகச் சரியான கேள்வி, கொரோனா நோய் வந்து பிறகு சரியானவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் நமக்கு இது தெளிவாய் விளங்கும்.
மனிதர்களுக்கு இருக்கும் பயம் என்கின்ற ஒரு விடயத்தை மிகச் சரியாக அறுவடைச் செய்திருக்கிறார்கள், மேலும் ஒரு விடயம் தெளிவாய் விளங்குகிறது ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் தகவல்கள் மற்றும் தரவுகளைக் கொண்டே எந்தக் கடுமையான கட்டுப்பாடுகளையும் உலக மக்கள் மீது எளிதாக விதித்துவிட முடியும், கேள்வி எழுப்பும் சிறு கூட்டத்தின் வாயையும் பெரும்பான்மை மனிதர்களின் பலம் கொண்டு மிக எளிதாக அடைத்து விடலாம். நாய் வேடம் போட்டால் குரைக்க வேண்டும் என்பதற்கு இணங்க உலக மக்கள் அச்சுப் பிசறாமல் அரசாங்கங்களை எந்தக் கேள்வியும் கேட்காமல் நடந்து கொண்டது மனித நாகரீகத்தின் உச்சம்.
டானிசு எழுத்தாளரின் The Emperor’s New Clothes கதைப் படித்திருப்போம், அந்த மன்னன் நிலைத் தான் நமக்கெல்லாம்… சிந்தியுங்கள்!
https://en.wikipedia.org/wiki/The_Emperor%27s_New_Clothes
கொரானா பீதி தேவையில்லை. என் மகனே எலுமிச்சை, இஞ்சி சாறு குடித்து சரியாகி விட்டான். அருகிலுள்ள எட்டு நாடுகளுக்கும் எல்லையை திறந்து விட்டேன். மக்கள் தேவாலயம், மசூதிக்கு போங்கள். நாடு பொருளாதார வீழ்ச்சி அடைய முடியாது. தனிமைப்பட்டு இருந்தால் மாத சம்பளம் வராது. தனிமைப்படுத்தி கொண்ட எம்.பி களுக்கு சம்பளம் கிடையாது. நாட்டில் கொரானா சாவு பல மடங்கு உயரும். மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என பயமுறுத்தும் உலக சுகாதார நிறுவன அதிகாரிகளில் பலர் பெருமுதலாளிகளின் சம்பள பட்டியலில் உள்ளார்கள்.
தான்சானியா அதிபர் ஜான் மகுபுலி முழு வீச்சில்.
https://www.theguardian.com/global-development/2020/may/19/tanzanias-president-shrugs-off-covid-19-risk-after-sending-fruit-for-tests