Site icon தமிழன் சங்கர்

எங்கள் சிலம்புச் செல்வன்!

எங்கள் சிலம்புச் செல்வன் | Great leader who forged a new identity for Tamil Nadu | tamilansankar.com

எங்கள் சிலம்புச் செல்வன்
பெரிய மீசை மா.பெ.சி
தமிழின தலைவன் எல்லாம்
இந்திய நலன் பார்த்தபோது
சென்னை நமதே என்று
சீறினான் எங்கள் மா.பெ.சி

தலை கொடுத்தேனும்
தலை நகர் காப்பேன்
அவன் உதிர்த்த வரிகள்
அதனால்
தமிழனின் தலைநகர்
அன்று தப்பியது.

சிறையில் புறநானுறு
படித்தான்
அதைப் படித்தும்
வீரம் வராத பதறா
தமிழன்… இல்லை
வீரமும்
வந்தது!
இனஉணர்வும்
வந்தது!

சிலம்பு சொல்லிய
தமிழ்நாட்டை
மாற்றான் பங்குபோடுவது
மானத் தமிழனுக்கு
இழுக்கல்லவா

சென்னை நமதே என்று
சீறினான் எங்கள் மா.பெ.சி

மூன்றாம் வகுப்பு
தான் படித்தான்
அவன்
எழுதிய புத்தகங்களோ
நூற்றைம்பது

திருத்தணியை
மீட்ட
வடக்கு
எல்லை போராட்டம்!
அவன் கண்ட
தீர்மானம்
மதராசு
எங்கள்
தமிழ்நாடு ஆனது

என் தாத்தன் மா.பெ.சி!
எங்கள் சிலம்புச் செல்வன்
பெரிய மீசை மா.பெ.சி!
வீரவணக்கம் ஐயா!

Copyright secured by Digiprove © 2020All Rights Reserved  
Exit mobile version