0

பனிமலர், உதய், கல்யாணசுந்தரம் எல்லாம் தேவையில்லாத ஆணி!

நமக்கு எப்பொழுதும் எழும்பும் கேள்வி சுயமரியாதை சுயமரியாதை என்று முழங்கிக் கொண்டு ஒரு கூட்டம் திரியும் சுத்தமாகச் சுயமரியாதை இல்லாமல், இப்போது ஏதோ அது வந்து விட்டதாக அதான் சுயமரியாதை வந்துவிட்டதாக ஒரு காட்சிப்பிழையை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. உதயநிதி ஒரு பிள்ளையார் சிலையைக் கீச்சில் பதிவிட ஈவேரா பேத்தி பனிமலர் இது தேவையில்லாத ஆணி என்று பதிலளிக்க “தேவையில்லாத_ஆணி_உதய்” என்கின்ற குறியீடு (HashTag) தமிழ்நாடு அளவில் முன்னணிக்கு வந்து பிரபலமாகிவிட்டது சில மணி நேரங்களில், கடவுள் எதிர்ப்பு நாடகம் இப்பொழுது திமுகாவின் தேர்தல் அரசியலுக்கு உதவுவது இல்லை அதை இந்துத்துவா மிகச் சிறப்பாகப் பயன்படுத்த தன்னாலான எல்லா யுக்திகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஈவேரா பேத்தி பனிமலர் “இது ஒரு தேவையில்லாத ஆணி” என்று போட உலகமெங்கும் வாழும் சங்கீகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான் களத்தில் இறங்கி அந்த “தேவையில்லாத_ஆணி_உதய்” பிரபலமாக்க, நமது திராவிட இளைஞர் அணிச் செயலாளர் அதாங்க உதயநிதி சுடாலின் இந்த எதிர்ப்புக்கு அஞ்சி கட்சியின் சார்பாக அறிக்கை விட்டுத் திமுகவிவில் இருக்கும் ஈவேரா பக்தர்களைக் குளிரவைக்க வேண்டியதாகிவிட்டது.

ஈவேரா பேத்தி பனிமலரருக்குத் திடலில் இருந்து ஈவேரா பக்தர்களால் வெகுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். திமுகவினருக்கு உதய்க்கும் தேள் கொட்டின கதை தான் இந்தச் சம்பவம். நமக்கு இந்தச் சம்பவமே பெரிய குழப்பமாக இருக்கிறது திமுகாவிற்கும் உதய்க்கும் இந்துத்துவாவை மட்டுப்படுத்த இந்து என்று நினைத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் ஒட்டு எங்கேயும் போய்விடக்கூடாது என்பதற்காக மஞ்சள் துண்டில் ஆரம்பித்துத் திமுக இந்து கட்சி என்று சொல்லியது போக விநாயகர் சிலை போட்டு நாங்கள் கடவுள் எதிர்ப்பாளர்கள் இல்லை என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே பிரசாந்த் கிசோர் வந்ததில் மவுசு குறைந்த ஈவேரா பக்தர்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று உதய்க்கே ஆப்பு வைத்துவிட்டனர் விநாயகர் சிலை விடயத்தில் திமுகவை நம்பி திடலா இல்லை திடலை நம்பி திமுகவா என்று நமக்கே குழப்பம் வருகிறது.

இங்கு இவ்வளவு பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கும் போது சவுக்குசங்கரின் செயல்திட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் ஏதாவது ஒரு குழப்பத்தை விளைவித்து விட முடியுமா என்று பயணி வலையொளியை பிரபலப்படுத்தி நாம் தமிழர் கட்சியின் உதயத்தில் இருந்து பிரயாணித்துக் கொண்டிருக்கிற பேராசிரியர் கல்யாணசுந்தரத்தை சீண்டி இருக்கிறார், என்ன நினைத்து சவுக்குசங்கர் அதைச் செய்தாரோ பல சமூக ஊடகங்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரத்தை இதைப் பற்றிக் கேட்டு தெரியாதவர்களுக்குக் கூட அவரைப் பற்றித் தெரிய வைப்பதற்கு உதவியாய் அமைந்துவிட்டது. சவுக்குசங்கர் கொடுத்த வேலையைச் சரியாய் செய்தாரா இல்லை இந்தச் செயல்பாட்டில் வேறு ஏதாவது விடயம் இருக்கிறதா என்று நாம் பொறுத்து தான் பார்க்கவேண்டும்.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!