0

தேநீர் கவிதை | தேநீரில் ஒரு ஓய்வு – தமிழன்சங்கர்

தேநீர் கவிதை: ஒரு தேநீர் கடை, ஒரு புன்னகை, ஒரு கோப்பை – தனிமையிலிருந்து மீளும் அந்த சிறிய தருணத்தை சொல்லும் தமிழ் கவிதை இது.

தேநீர் கவிதை – ஒரு கோப்பை தேநீரின் வெப்பத்தில் அமைதி, அன்பு, நினைவுகள் மெதுவாக மலரும் தமிழன்சங்கர் கவிதை.

தேனீர் கடை திறந்திருந்தது.
உள்ளே நுழைந்தபோது,
பார்த்தவர்கள் அனைவரும்
என்னை பார்த்து புன்னகைத்தனர்!

தேனீர் கோப்பைகளின்
உரசலில் மேசைகளும்
ஆனந்தக் கூச்சலிட்டது!

வெறுமை உங்களை
நெருங்கும் போது,
தேனீர் கடைக்கு செல்லுங்கள்,
ஒரு கோப்பையில்,
உங்களை மீட்டெடுக்கலாம்!

-தமிழன்சங்கர்

மேலும் தமிழ் கவிதைகள்