தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
தமிழர் தாயகத்தில் இருந்து பத்தாயிரம் மைல் கடந்து உலகத் தமிழர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், இங்கே நமது தாய்மொழி தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தொடர்ந்து நம்மால் முடிந்த அளவிற்கு தன்னார்வலர்களாக பல தமிழ் அமைப்புகளில் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். தேசிய அளவில் தமிழருக்கான ஒரு அமைப்பாக இருப்பது பெட்னா (FETNA). அந்த அமைப்பு எந்த அளவிற்கு சரியாக நடைபோடுகிறதோ, அதை வைத்துத்தான் தமிழர்களின் திறனும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் நமது தமிழ்ச் சமூகத்தின் நலனும் பெருகும்.
எனக்கு நன்கு அறிமுகமான நண்பரும், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் (Ex. President), முன்னாள் இயக்குநர் குழுத் தலைவருமான (Ex. Chairperson) திருமிகு எழிலன் ராமராஜன் அவர்களின் இடையறாத சமூகப் பணிகளை அட்லாண்டாவில் நேரில் கண்டிருக்கிறேன். பணிவாகப் பேசும் தலைமைப் பண்பு மிக்க அவர், பேரவையை நடத்த மிகத் தகுந்த தலைவர் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை. அவரையும் அவரது அணியையும் ஆதரித்து பேரவையை மேலும் வலுப்படுத்துங்கள். நன்றி!
வெல்க தமிழ்! வாழ்க தமிழர்!
Greetings to all Tamil friends,
We live thousands of miles away from our Tamil homeland, yet we continue to serve our language and our community through various Tamil organizations as volunteers, contributing in whatever way we can. FETNA is a national-level organization that represents Tamils across North America. The stronger and more effective this organization is, the greater the opportunities and benefits for our Tamil community in a developed country like the United States.
I have personally witnessed the dedicated community service of Mr. Ezhilan Ramarajan in Atlanta over many years. He is a former President and former Chairperson of the Atlanta Tamil Sangam and has consistently worked for the benefit of the Tamil community. His calm nature, leadership qualities, and commitment to service make him highly qualified to lead FETNA.
I have no doubt that he is the right person for this responsibility. I encourage everyone to support him and his team and help strengthen FETNA for the future.
Thank you.
Long Live Tamil!
Long Live Tamils!
