நம்ம மதிப்பிற்குரிய தமிழன் எடப்பாடியார் ஆட்சியில் தமிழர் மெய்யியலுக்கு இழிவா என்ன, இந்துத்துவா வந்துவிடுமா என்ன, என்று நாம் சந்தேகப்படத் தேவையில்லை, அதிமுகவுக்கும் இந்துத்துவா பாரதீய சனதாவிற்கும் ஒரு மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அஃது எந்த அளவிற்கு உண்மை என்று நமக்கு ஒரு சந்தேகம் இருந்தாலும் இந்துத்துவா கூட்டம் ஒரு புறம் வேல் யாத்திரை என்று நமது முருகனின் வேலை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது. வேல் ஓர் அறிவாயுதம் அதையெல்லாம் பயன்படுத்தும் அளவிற்குத் திறமை இந்துத்துவாதிகளுக்கு இல்லை.
ஒரு முப்பது நிமிட காணொளி ஒன்று பகிரியில் பகிரப்பட்டது, மேடைப்பேச்சின் இலக்கணம் எதுவுமின்றிச் சகட்டுமேனிக்கு இந்துத்துவாவிற்கு எதிரணியில் இருக்கும் அரசியல்வாதிகளைப் படு கேவலமாக ஒரு பெரியவர் திட்டி தீர்த்தார் யார் என்று பார்த்தல் அனுமான் சேனாவின் தலைவராம். மதம் மனிதனை செம்மை படுத்தவேண்டும் இந்தப் பெரியவர் சிறீரீதர் மதவெறியாளர்களுக்கு மிகச் சிறந்த உதாரணம். சுடாலின்,வைகோ,திருமாளவன் என்று தொடங்கிச் சீமான் வரை திட்டி தீர்த்துவிட்டார். அரசியல் சாக்கடை என்று தமிழர்களை ஒதுங்க வைத்த அதே யுக்தி தான். இந்துத்துவா போடும் பல வேடங்களில் அர்சூன் சம்பத்,சிறீதர், கல்யாணராமன், எச்.ராசா போன்றோர் ஒரு வகையான முகம்.
மத்தியில் நேரடி இந்துத்துவா ஆட்சி இருக்கும் வரை தான் இது போன்று தமிழர் நாட்டில் குழப்பங்களை விளைவிக்க முடியும் மறைமுக இந்துத்துவா ஆட்சியோ இல்லை உலகத் தொழிலார்களே (கம்யூனிசுடு) கட்சியின் கூட்டணி ஆட்சியில் எல்லாம் இது போன்று வெளிப்படையாக வரமுடியாது. கடவுளை கும்பிடுவது அவரவர் தனிப்பட்ட உரிமை ஆனால் அதற்கு ஒரு கூட்டத்தைக் கூட்டி அரசியல் செய்வது எல்லாம் தமிழ்நாட்டில் ஒரு காலும் எடுபடாது. திராவிடனை தமிழன் தலையில் தூக்கி கொண்டாடியதற்குக் காரணமே தமிழர்களின் உதிரத்தோடு ஊறிப் போன வேத சமய எதிர்ப்பு தான். விநாயகர் ஊர்வலம் மூலம் வடக்கை கைப்பற்றிய இந்துத்துவக் கட்சி இங்குத் தொடர்ச்சியாக விநாயகர் ஊர்வலம், ரத யாத்திரை, வேல் யாத்திரை என்று புதிது புதிதுதாய் பல மதக் கலவரங்களை உருவாகும் தேவையற்ற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது.
தமிழர் மெய்யியல் மதங்கள் அனைத்தையும் ஒன்றாய்ப் பார்ப்பது சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை போன்ற தமிழர் காப்பியங்களில் பல சமயங்கள் அமைதியாய் விவாதம் செய்த நிகழ்வுகள் பதிய பட்டிருக்கின்றன.
இந்த அனுமன் சேனா மதவெறி சிறீதர் போல் ஆயிரமாயிரம் தரங்கெட்ட நபர்கள் வந்தாலும் தமிழர் பூமியில் மதச் சாயத்தைப் பூசமுடியாது. சிறு சிறுவிடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எடப்பாடி அரசு மதவெறியை தூண்டும் இது போன்ற அமைப்புகளுக்குக் கடிவாளம் போடவேண்டும்.
மீண்டும் சந்திப்போம்…