0

வேதாந்தவின் வெற்றி இனி தமிழர்களுக்குக் கருப்பு நாளே!

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் சோரம் போனவை, உங்களுக்காகப் போராட வருகிறோம் என்று செல்லுபவன் எவனும் நேர்மையாகப் போராடுவதில்லை. இங்குப் போராடுபவனும் அவனே ஆலைக்கு அனுமதி கொடுப்பவனும் அவனே… எதிரிகள் மட்டும் இல்லை துரோகிகள் பெருத்த கூட்டமாய்த் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மாறியுள்ளன. யாரையும் நம்பும் நிலையில் தமிழர்கள் நாம் இல்லை. மக்கள் சக்தி இயக்கங்களின் போராட்டமே அதிகார திமிர் பிடித்த ஆட்சியாளர்களை உலுக்குகிறது… நமது வாயிலேயே சுட்டாலும் நமது போராட்டத்தில் இருந்து நாம் பின் வாங்க முடியாத நிலை தான் இருக்கிறது. நாளை ஒருவன் நமக்கு வழிகாட்ட வருவான் என்று நம்புவதோ இல்லை, தலைவன் ஒருவன் வருவான் என்பதோ நமது பிரச்சனைக்குத் தீர்வாகாது. நாம் தான் போராடித்தான் ஆக வேண்டும். மக்கள் நலன் பற்றிக் கொஞ்சமேனும் சிந்தித்த அரசியல்வாதிகளும் ஏன் நீதிமன்ற நீதிவான்களும் அருகிவிட்டனர். இந்திய ஒன்றியத்தின் மக்களாட்சி, மறைமுகச் சர்வாதிகாரத்தின் பிடியில் இருக்கிறது. மக்கள் சக்தியை விட வணிகர்களின் சக்தி பெரியது என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது இந்த அதிகார திமிர் பிடித்த மக்களுக்கெதிரான அரசாங்கங்களால் வேதாந்தவின் வெற்றி இனி தமிழர்களுக்குக் என்றும் கருப்பு நாளே!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!