தேனீர் கடை திறந்திருந்தது.
உள்ளே நுழைந்தபோது,
பார்த்தவர்கள் அனைவரும்
என்னை பார்த்து புன்னகைத்தனர்!
தேனீர் கோப்பைகளின்
உரசலில் மேசைகளும்
ஆனந்தக் கூச்சலிட்டது!
வெறுமை உங்களை
நெருங்கும் போது,
தேனீர் கடைக்கு செல்லுங்கள்,
ஒரு கோப்பையில்,
உங்களை மீட்டெடுக்கலாம்!
-தமிழன்சங்கர்