0

தேனீரில் ஒரு ஓய்வு | Tea, Warmth & You – தமிழ் கவிதை

தேனீர் கடை திறந்திருந்தது.
உள்ளே நுழைந்தபோது,
பார்த்தவர்கள் அனைவரும்
என்னை பார்த்து புன்னகைத்தனர்!

தேனீர் கோப்பைகளின்
உரசலில் மேசைகளும்
ஆனந்தக் கூச்சலிட்டது!

வெறுமை உங்களை
நெருங்கும் போது,
தேனீர் கடைக்கு செல்லுங்கள்,
ஒரு கோப்பையில்,
உங்களை மீட்டெடுக்கலாம்!

-தமிழன்சங்கர்

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!