0

அம்மாக்களே, உங்களை வணங்குகிறோம்!

உயிர் உருக
உலகத்தின் வலியை
தாங்கியவளே…
மூத்தவள்
நீ அளித்த
கருணையில்
இந்த
புவியே
எங்கும் மனிதமாய்
பூத்துக் குலுங்குகிறது
நீ
பாரபட்சம்
பார்க்கவில்லை
நீ
பெற்றெடுத்த
பல பிள்ளைகள்
உன்னை
வஞ்சித்தாலும்
உன்னிடம்
வஞ்சனை
இல்லை…
பொறுமைக்கும்
நீ
தான்!
அன்புக்கும்
நீ
தான்!
உன் கருணையே
எங்கள் அவயம்,
தாய்மை
எங்கும்
வியாபிக்க
வணங்குகிறோம்
அம்மாக்களே!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!