பாடல்:-
வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோ ளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க எனவேட் டேமே.
பொழிப்பு:-
வாழ்க ஆதன்! வாழ்க அவினி! மக்களின் பாதுகாவலனான மன்னன் வாழ்க, விருந்தோம்பல் புரிய நெல் நிறைய விளையட்டும், இரவலர்க்கு வழங்குதற்கு செல்வம் கொழிக்கட்டும் என்று என் தோழி விரும்புகின்றாள். மொட்டுக்களையுடைய காஞ்சி மரங்களும், சிறிய சினை மீன்களுடைய வளம் நிறைந்த ஊரின் தலைவன் வாழ்க, அவனுடைய பாணனும் வாழ்க என்று விரும்பினோம்.