0

கெஞ்சுவதும் அடிபணிவதுமா எங்கள் வேலை ?

Campaign for Tamil Justice | Eco-shout

11 ஆண்டுகள் கடந்துவிட்டன… இனப்படுகொலைகளை எளிதாகக் கடந்து செல்ல நம்மைச் சார்ந்தோருக்கும் மனநிலை வந்துவிட்டது. வீரம் சொரிந்தக் கேள்விகள் கொச்சையாக்கப்படுகின்றன. இறைஞ்சி நிற்கும் கேள்விகள் ஏளனப்படுத்தப்படுகின்றன. அரசியல் அறிவாளிகளால், அரசியல் அனர்த்தங்கள் புரியாமல் உணர்வுமிக்கத் தமிழர்கள் தரம் தாழ்த்தப்படுகின்றனர்.

எனக்கிருக்கும் நேர்மையான சில கேள்விகள்:-

  1. உலகமெங்கும் தமிழால், தமிழர்களின் உழைப்பால் உயர்ந்தத் தமிழ்ச்சங்கங்கள் ஏன் மே மாதத்தில் தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இரங்கல் செலுத்துவதில்லை ?
  2. உலகமெங்கும் இருக்கும் தமிழ்ச்சங்கங்கள் ஒன்று சேர்த்தால் அதன் பலம் தமிழ்நாட்டு அரசுக்குக் கூட இருக்காது இந்தப் புரிதல் இல்லாமல் தமிழ்ச்சங்கங்கள் ஏன் ஒன்றுபட்டுத் தமிழர்களுக்கு என்று நிற்பதில்லை ?
  3. உலகமெங்கும் இருக்கும் தமிழ்ச்சங்கங்கள் நாங்கள் எந்த அரசியலையும் சங்கத்தில் அனுமதிப்பதில்லை என்று கட்டமைப்பு விதிமுறைகளில் எழுதி வைத்து இருக்கின்றீர்கள் , உங்கள் நெஞ்சத்தில் கை வைத்துச் சொல்லுங்கள், அதை உண்மையில் நீங்கள் பின்பற்றுகிறீர்களா?
  4. இது தமிழர்களின் அமைப்பு நாங்கள் தமிழர்கள் எங்களுக்குத் தமிழின உணர்வு இருக்கிறது என்று சொல்வதை விடத் தமிழ்ச்சங்களின் செயல்பாடே அதை உலகிற்குப் பறைசாற்றவேண்டும் அப்படி நடக்கிறதா ?
  5. குண்டுகள் உடல்களைச் சிதறடித்து ஆண்,பெண்,குழந்தைகள், முதியவர் என்று குப்பையாக அங்கங்களைப் பொறுக்கி எடுத்த நினைவுகளை நாங்கள் சொல்கிறோம், நீங்களோ கரோனோ தொற்று நோயைப் பொருளாதார இழப்பை அதற்கு இணையாகப் பேசி எங்கள் உணர்வுகளை அசிங்கப்படுத்துகிறீர்கள். Please do not compare apple to orange.

இறுதியாக ஒரு கேள்வி, தமிழ் என்று கட்டமைக்கப்படும் எந்த நிறுவனங்களும் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் கட்டுப்பட்டது அதைத் தாண்டி நீங்கள் மனிதமாக பொதுவாக உழைக்கப் பல தனியார் பொது நிறுவனங்கள் இருக்கின்றன. நாங்கள் உலகிற்குக் கொடுத்த சொற்றோடரே “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எங்களிடமே அதைத் திரும்பச் சொல்கிறீர்களே அது சரியா ?

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!