தமிழ் மொழி வளர்ச்சியில் உலகெங்கும் இருக்கும் தமிழ்ப் பள்ளிகளை நாம் பாராட்டியாகவேண்டும், சென்ற வருடம் தொடங்கிய கம்மிங் தமிழ்ப் பள்ளித் தன் சிறப்பான சேவை மூலம் அமெரிக்க மாநிலத்தில் ஒன்றானச் சார்சியா(Georgia) மாநிலத்தால் அங்கீகரிக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் அகமகிழ்ந்தேன்.
ஒரு வருடம் ஓடிய வேகம் தெரியவில்லை, பள்ளியின் இறுதி மாதங்கள் கொரோனாத் தொற்றுக் காரணமாகச் சில தடைகள் வந்த போதிலும் (அது மட்டுமா தடைகள்…) பலமாகச் செயல்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றதற்கு எனது சிறப்பான வாழ்த்துக்கள்.
எனக்கொரு ஆசை இருக்கிறது உலகெங்கும் இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் உண்மைத் தமிழுணர்வாளர்கள் எழுதிய ஒரே பாடத்திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது, ஆளாளுக்குத் தகுந்தபடித் தமிழ்மொழி பாடத்திட்டங்களை வைத்துக் கொண்டு இப்பொழுது நடக்கும் கூத்துக்கள் ஒரு நாள் முடிவுக்கு வரவேண்டும்.
கம்மிங் தமிழ்ப்பள்ளியின் தாளாளருக்கும், தன்னார்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் என் வாழ்த்துக்கள்…