0

நாம் தமிழர், இது விமர்சனம் அல்ல!

தமிழர்கள் தமக்கென்று ஓர் ஆட்சியமையாதா என்று ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் கட்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது நாம் தமிழர் கட்சி, இன்று ஒரு சேர சில செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

நாம் தமிழர் கட்சியைக் குறை சொல்வதோ, கேள்வி கேட்பதோ நமது எண்ணம் இல்லை, ஆனால் பகிரப்பட்ட செய்திகளைப் பொது மக்கள் எப்படிப் புரிந்து கொள்வார்கள் என்கின்ற கண்ணோட்டத்துடன் அணுகுவது நல்லது.

முதலில் நல்ல செய்தியில் இருந்து ஆரம்பிப்போம், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நாம் தமிழர் கட்சியின் கலியாணசுந்தரம் அவர்களுடன் ஒரு விவாதத்தில் கலந்து கொண்டார், அந்த நிகழ்ச்சியின் தலைப்பு “திராவிடமா? தமிழ்த்தேசியமா?” இந்த விவாதம் பல தளங்களில் நடை பெற்றுக் கொண்டிருந்தாலும், இந்த விவாதம் கலியாண சுந்தரத்திற்கு மைல் கல்லாக அமையும், திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியைப் பொறுத்தவரை இந்த விவாதத்தை மறக்கவே நினைப்பார். அதற்கு தமிழ்த்தேசியர்களால் செல்லமாக தோசைமாறன் என்று அழைக்கப்படும் மதிமாறனின் கீச்சே சான்று. வாழ்த்துக்கள் கலியாணசுந்தரம்.

இரண்டாவது செய்தி நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் ராசீவ்காந்தி என்கின்ற அறிவுச் செல்வன் அவர்களின் ஈ.வே.ரா பற்றிய கீச்சை ஒட்டியது, கடந்த பத்து வருடங்களில் திராவிடச் சித்தாந்தத்தைத் தமிழ்த்தேசிய கருத்தியலின் மூலம் துவம்சம் செய்து கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சியினரை குழப்பும் வகையில் ஈ.வே.ராவை தமிழர்களின் பேரரசனாக வைக்கவேண்டும் அது தான் என் நிலைப்பாடு என்று கீச்சில் பதிவிடுகிறார்.

கலியாணசுந்தரம்,அறிவுச்செல்வன் என்று தனிப்பட்ட நபர்கள் கட்சி சார்பின்றி ஏதோ செய்கிறார்கள் என்றால் தமிழர்கள் நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் முரண்பாடான பார்வைகள் இருந்தால் அதை விரைவில் சரி செய்யவேண்டும், இல்லை என்றால் அது குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்.

தமிழர்களுக்கு என்று இருக்கும் முக்கியமான கட்சி இந்த முரண்பாடுகளைக் கலைக்க வேண்டும், தமிழர்கள் அரியணை ஏற வேண்டும்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!