0

சீமான், பாரிசாலன், தீரன் கொல்லுவோம் எனும் தொனி!

சில தினங்களாகச் சமூக ஊடகங்களில் வந்து கொண்டிருக்கும் அலப்பறைகளின் காணொளிகள் தமிழர்களின் பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் இருக்கிறது. தமிழர்கள் வள்ளுவன் சொல்லிய

என்பில் அதனை வெயில் போலக் காயுமே
அன்பில் அதனை அறம்

எனும் திருக்குறள் படி எறும்புக்கும் இரக்கம் காட்ட வாசலில் அரிசியால் கோலம் போடும் மாண்பு உடையவர்கள்.

எங்கள் வரலாறுகளை அழித்தீர்கள், மறைத்தீர்கள் மூடனாய் நாங்களும் வாழ்ந்துவிட்டோம், இன்று எங்கள் வேர்களைத் தேடி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம், எங்களை அடிமைப்படுத்த நீங்கள் செய்த அத்தனை அயோக்கியத்தனங்களும் இப்பொழுது வெட்ட வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது. நாங்கள் இழந்த உரிமையை நாங்கள் கேட்பது உங்களுக்கு வலிக்கிறதா ? கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்பது வரலாற்று உண்மை, எழுத்தாளர் தமிழ்வாணன் தொடங்கிப் பாரிசலான் முதல் எங்கள் தொண்டைகளை அடைக்க ஏன் இவ்வளவு வன்மம் உங்களுக்கு.

கட்டபொம்மலு உண்மையில் தமிழர்களுக்கான வீரனா ?

திருநெல்வேலி கலெக்டர் ஜாக்சன், வரிகட்டச் சொல்லி கட்டபொம்முலுவுக்குக் கடிதம் மேல் கடிதம் அனுப்புகிறார். கட்டபொம்முலு வோ தவணை மேல் தவணை சொல்லித் தட்டிக் கழித்து வருகிறான். இதனால் ஆத்திரம் கொண்ட ஜாக்சன், தன்னை 05.09.1798 அன்று இராமநாதபுரத்திற்கு நேரில் வந்து பார்த்து விளக்கம் தரவேண்டும் இல்லையேல் பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் பறிமுதல் செய்யப்படும் என்று கடிதம் அனுப்பினார்.

ஜாக்சனின் கடிதத்தைக் கண்டதும் கட்டபொம்முலு குறிப்பிட்ட நாளில் ஜாக்சனைப் பார்க்க இராமநாதபுரத்திற்குத் தன் பறிபாரங்களுடன் செல்கிறார். கட்டபொம்முலு தன்னைப் பார்க்க வருகிறார் என்று அறிந்ததும் ஜாக்சன் குற்றாலத்திற்குக் கிளம்பி விடுகிறார். கட்டபொம்முலு ஜாக்சனை சந்திப்பதற்காக, ஜாக்சனை பின் தொடர்ந்து குற்றாலத்திற்குச் செல்கிறார். அங்கும் கட்டபொம்முலு பார்க்க ஜாக்சன் மறுத்து விடுகிறார். இப்படியே ஒவ்வொரு ஊராக அதாவது சொக்கம்பட்டி, சேத்தூர், சிவகிரி, சிறிவில்லிபுத்தூர், பேரையூர், பவாலில், பள்ளிமடை, கமுதி என்று சுற்றி இறுதியில் இராமநாதபுரத்தை வந்தடைந்தார் ஜாக்சன். கட்டபொம்முலு ஜாக்சன் சென்ற ஊருக்கெல்லாம் அவரைப் பின் தொடர்ந்து சென்றார். இதில் எந்த ஊரிலும் கட்டபொம்முலு-வை சந்திக்க விரும்பாமல் அலைகழித்து வந்தார்.

இறுதியில் கட்டபொம்முலு இராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்து விளக்கம் கொடுத்தான். வரிகட்டாமையைப் பற்றி ஜாக்சன் கேட்க, தான் கட்ட வேண்டிய பணத்தையும் கையோடு கொண்டு வந்துள்ளதாகக் கூறினான். அடுத்து அரசு கிராமங்களில் குழப்பம் ஏற்படுத்தியது தொடர்பாகக் கேட்க, அப்படியேதும் நான் செய்யவில்லை என்று கட்டபொம்முலு மறுத்துக் கூறுகிறார். இறுதியாக, “நமக்குள் ஏற்பட்ட இந்த உரையாடலைச் சென்னைத் தலைமைக்கு அனுப்புகிறேன் அதற்கான பதில் வரும் வரை நீங்கள் இங்கு இருக்க வேண்டும்” என்று ஜாக்சன் கூறியதும் கட்டபொம்முலு அங்கிருக்க அஞ்சி, தப்பிவிடுகிறார். அவர் தப்பும் போது ஏற்படுகிற கலவரத்தில் ஒரு வெள்ளைக்கார கொலை செய்யப்படுகிறான். கட்டபொம்முலு அமைச்சனும் ஆலோசகனுமான தானாபதிப் பிள்ளையும் கைது செய்யப்படுகிறார்.இந்த நிகழ்வு கட்டபொம்முலு வீரனாகக் காட்டுகிறதா? அல்லது வெள்ளையனுக்கு அடிபணிந்தவனாகக் காட்டுகிறதா? மேற்கண்ட நிகழ்வு பற்றிய பதிவு இன்றும் ஆவணக் காப்பகத்தில் இருக்கிறது என்கிறார், தமிழ் வாணன். அப்படி என்றால் கட்டபொம்முலு வெள்ளையனுக்கு அஞ்சினான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதில் எங்கிருக்கிறது வீரம்… எங்கே இருக்கிறது விடுதலை முழக்கம்…

சீமான், பாரிசாலன், தீரன் திருமுருகன் போன்றவர்களுக்கு விடுத்த கொலை மிரட்டல்!

சீமான்,பாரிசாலன்,தீரன் போன்றவர்களைக் கொலை செய்துவிடுவோம் என்று சமூக ஊடகங்களில் காணொளிகள் பரப்பபட்டுக் கொண்டிருக்கின்றன, இது போன்று காணொளிகள் போடுபவர்கள் தான் சமூக நல்லிணக்கத்திற்கு எதிரிகள், வரலாறு நிகழ்வுகளைப் பணம் மற்றும் அதிகாரப்பலத்தால் திரித்தால் நீண்ட காலம் அந்தப் பொய் நிலைக்காது.

அடக்கி ஆளப்பட்ட தமிழர்களில் சிலருக்கு தான் உணர்வு வந்து இருக்கிறது அவர்களின் குரலையும் அடக்க வேலைகள் பலமாக நடந்து கொண்டிருக்கிறது, இதையெல்லாம் தமிழர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்கள் என்று எண்ணினால் அதை விட மடத்தனம் எதுவும் இந்த உலகில் இருக்காது. தமிழர்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு பேசும் போக்குப் பெருத்துக் கொண்டிருக்கிறது, இதை தமிழக அரசு கண்டும் காணாமல் இருப்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. தமிழர்களிடம் உண்மையான அதிகாரம் இல்லை என்பது கண்கூடாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஈழத்தின் அழிவு கண்டும் தமிழர்கள் உணர்வு பெறாத நிலையில், அரசியல் தெளிவு பெறாத நிலையில், குரல் கொடுக்கும் சிலரின் குரல்வளையை நெறிப்பதை ஒரு காலும் அனுமதிக்க முடியாது. திராவிட ஆரிய கூட்டுக் களவாணிகளின் அதிகாரக் கரங்களைத் தமிழர்கள் தூள் தூளாக்குவோம்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!