0

விண்வெளிவீரர் ஆதி, ராகவா லாரன்சு இவர்கள் மட்டுமா!

சில தினங்களாக சமூக ஊடகங்களில் பல காணொளிகள் பகிரப்பட்டன இப் ஆப் ஆதி பற்றி வேடிக்கை என்ன வென்றால் தமிழர்கள் எவ்வளவு அப்பாவியாய் மாற்றப்பட்டிருக்கிறோம் என்பது தான்.

ஆலிவூட் திரைப்படமான Promised Land எனும் திரைப்படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள் தமிழர்களே, நமது அறியாமை கண்களைத் திறக்கும் அருமையான படம், போராடுபவர்களைக் கூட வேலைக்கு அமர்த்தி ஒரு போலி போராட்டத்தை நடத்தி சாமான்ய மக்களின் கண்ணில் மண்ணைத் தூவுவதை அருமையாகப் படம்பிடித்திருப்பார்கள்.

இந்த ஆதி,கார்த்திகேய சிவசேனாதிபதி,லாரன்சு போன்றவர்கள் எல்லாம் அந்த வகையில் போராட வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் தான். தமிழர்களின் பிரதிநிதி என்று ஒரு தமிழனே வந்தாலும் அவனைக் கேள்விகளால் நாம் துளைத்தெடுத்து தான் ஆகவேண்டும், இன்று நமக்கு வேறு வழியில்லை, அவ்வப்போது பகிரியில் சில பதிவுகள் வரும் இவர் தமிழர் இல்லை அவர் தமிழர் இல்லை என்று, முதலில் அதிர்ச்சியாக இருந்தது ஆனால் தமிழன் காசு கொடுத்து தூக்கிவிட்ட முக்கால்வாசி பேர்கள் தமிழர்கள் இல்லை என்பதே நிதர்சனம்.


ஏன் தமிழரல்லாதவர் பிரபலமாக்கபடுகிறார் என்று சிந்தியுங்கள் தமிழர்களே, உங்களுக்கே பல விடயங்கள் புரியவரும். கலை, இலக்கியம், திரைத்துறை, அரசியல் என்று அனைத்திலும் தமிழன் சிறுபான்மையாகிவிட்டான் எந்தத் துறையில் இருந்து தமிழர்கள் சார்பாக யார் பேசினாலும் அவர்களின் வரலாறுகளைத் தேடுங்கள், நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம் ஏன் அவர் தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் எதிராகச் செயல்படுகிறார் என்று.

தான் உண்டு தன் வேலையுண்டு என்று அசித்தை போல் தமிழ் திரையுலகில் வலம் வருபவர்கள் குறைவே, நடிகர் அசித்தை போல் இருப்பவர்களால் தமிழர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ஆனால் அதுவே ரசினி போல் இருந்துவிட்டால் அது நமக்குப் பெரும் பாரமே. சரியான நபர்களை அடையாளம் கண்டு உயர்த்துங்கள் தமிழர்களே.


வந்தாரை வாழவைத்தது போதும், நம்மவர்களை வாழவிடுங்கள்!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!