0

நித்தியானந்தா குற்றவாளியா, பிரதம அமைச்சரா!

நமது நாகரீக வளர்ச்சியில் பல விடயங்கள் அதன் தன்மையில் மாறியிருக்கிறது, ஊரு மொத்தமும் சேர்ந்து கலாய்த்து எடுத்த நித்தியானந்தா சாமியார் மட்டும் இல்லையாம் சிறந்த அறிவாளியும் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் பலர். பொருத்தாளரா குற்றவாளிகள் நாட்டை விட்டு ஓடுவதும் அவர்களைத் திரும்பக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்வதாக நாடகம் நடத்துவதும் நாம் பார்த்து பார்த்து சலித்துப்போன விடயங்கள். இந்தியாவில் இருந்து வெளியேறிய பல குற்றவாளிகள் எந்த வித சிக்கலும் இல்லாமல் வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பது எல்லாம் சாதாரண விடயம் இல்லை, அது போல் இருப்பதற்குப் பணமும் சட்டங்களை வளைக்கும் அதிகாரமும் துணை இருக்க வேண்டும்.

நித்தியானந்தாவின் கதை போல் நாம் பல கதைகளைப் பார்த்திருக்கிறோம், சாமியார்களுக்குப் பொதுவாக இந்தியாவில் மவுசு தான் ஆனால் புகழின் உச்சிக்கு அதிகாரத்தின் அருகில் நெருங்குவதற்கு என்று சில தகுதிகள் இருக்கின்றன. அதில் ஒன்று தமிழனாய் நிச்சயம் இருக்கக் கூடாது, நமது ஆதினங்களின் நிலையைப் பாருங்கள் ஒரு கட்டத்தைத் தாண்டி அவர்கள் வளர முடியாது. ரவிசங்கர், பாபா ராம்தேவ், சக்கி வாசுதேவ் போன்று முன்னணியில் இருக்கும் பெருநிறுவன சாமியார்களே அதற்குச் சிறந்த உதாரணம்.

நமது சட்டங்கள் எல்லாமும் சட்டத்தை மதிக்கும் சாமானிய மனிதர்களைத் தான் வாட்டி வதைக்கும், பணமிருக்கும் அரசியல்வாதிகளோ,முதலாளிகளோ,சாமியார்களோ சட்டத்தைக் கண்டு அஞ்ச தேவையில்லை. பெயர் தெரிகின்ற அளவிற்கு ஒரு சாமியாராக வருவதே பெரிய விடயம் ஏன் என்றால் அவ்வளவு சாமியார் கூட்டம் இங்கிருக்கிறது. நமது நித்தியானந்தா வேக வேகமாக வளர்ச்சியடைந்தார், திராவிடக் கூட்டத்திற்கும் அவருக்கும் ஏற்பட்ட முரணில் அவரை ஒழிக்க எண்ணி சிறுவர் சிறுமிகள் கூடத் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் சர்வசாதாரணமாக அவரது ஆபாச காணொளிகள் தமிழ்நாடு எங்கும் ஒளிபரப்பப்பட்டன. திராவிடத்தின் கூட்டுக்களவாணிகளான இந்துத்துவா, இந்து மதத்தில் தமிழரல்லாதவர்கள் மட்டுமே செழித்து வளர முடியும் எனும் எழுதப்படாத சட்டத்தைக் கொண்டு நித்தியானந்தாவை ஒழிக்கும் அனைத்து முயற்சிக்கும் வழிவகைச் செய்தது. இந்து மதம் தமிழர் மதங்களைக் கவர்ந்தது ஆனால் அதன் தலைமைக்கு எந்தத் தமிழரையும் அனுமதிக்காது. தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று உணர்த்துவதற்கு நாம் எதையும் செய்யத் தேவையில்லை இந்து மத நிறுவனங்களே தமிழர்களைத் தலைமைக்கு அனுமதிக்காமல் காலம்காலமாக அதைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. கோயில் சென்று சுத்த எண்ணத்தோடு வழிபடும் தமிழர்கள் வழிபாட்டினை மட்டும் கருத்தில் கொள்வதால் இந்து மதநிறுவனங்களில் இருக்கும் இது போன்ற விடயங்களை அவர்கள் கூர்ந்து கவனிப்பது இல்லை, இனி அவர்கள் நிச்சயம் இதில் கவனம் செலுத்தவேண்டும். ஒரு தமிழன் இந்தியாவின் பிரதமராவதோ, இந்து மதநிறுவனத்தில் ஒரு தமிழன் தலைமைக்கு வருவதோ குதிரைக்குக் கொம்பு முளைத்த கதை தான்.

நித்தியானந்தா வெளியிட்ட தங்க நாணயங்கள் பலருக்கு அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கும், தமிழன் அறத்தொடு இருக்கும் வரை தான் சகிப்பு தன்மையெல்லாம், தமிழனை அயோக்கியனாகிவிட்டால் இந்த உலகம் தாங்காது.  நித்தியானந்தா சட்டத்தின் முன் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார் அது நிரூபிக்கபடவேண்டும், ஆனால் அவரிடம் இருக்கும் பணம், அரசியல் மற்றும் பொருளாதார அறிவாளிகள் இந்துத்துவா எந்த நாளிலும் கொடுக்க விரும்பாத இடத்தைக் கொடுக்கப் பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். தமிழர்கள் நாம் புன்முறுவலோடு நடக்கும் நாடகங்களை வேடிக்கை பார்ப்போம்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!