0

கரூர் ஓசி பிரியாணியும் திராவிடர் வரலாறும்!

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைப் பற்றி ஒரு நிமிடம் சிந்திக்க ஆரம்பித்தாள், நாம் இதுவரை கற்ற,கேட்ட,பார்த்த விடையங்களை வைத்து தான் சில முடிவுகளுக்கு வரமுடியும், அப்படி நாம் ஒரு முடிவுக்கு வந்தால் அந்த முடிவு சரியான முடிவு என்று அர்த்தமா… உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். இதைப் பற்றி இறுதியில் பார்ப்போம்.

என் கண்ணில் பட்ட செய்திகளைப் பகிர்கிறேன், முதலாவதாகக் கீச்சில் பிரபலமான இரண்டு குறியீட்டுச் சொற்களைப் பார்ப்போம், #கரூர்_ஓசிபிரியாணிதிமுக,#கரூர்லெக்பீஸ்திமுக , எனக்கு வடமொழியில் தமிழை எழுதுவது பிடிக்காது ஆனால் இது போன்று சில சமயங்களில் அதைக் கடைப்பிடிக்க முடியாமல் போய்விடும். தமிழர்களின் இன்றைய பல ஒழுக்கக் கேடுகளுக்கு அச்சாரம் இட்டது திராவிடர் கழகம் தான் திராவிட முன்னேற்ற கழகம் ஆம் மிகச் சரியான பெயர் தான் ஒழுக்கக் கேடுகளில் பல முன்னேற்றத்தை கொடுத்தது அந்தக் கட்சி தான் இதையெல்லாம் நான் சொல்லவில்லை கருணாநிதியுடன் சம காலத்தில் பயணித்த கவியரசர் கண்ணதாசன் கொடுக்கும் தகவல்கள் கண்ணதாசனும் கருணாநிதியும் திரைத்துறையிலும் அரசியலிலும் ஒரே சமயத்தில் கோலோச்சினார், கருணாநிதியிடம் தமிழர் கண்ணதாசன் அரசியலில் வெல்ல முடியவில்லை அறத்தால் தமிழன் வீழ்ந்துக் கொண்டிருப்பதற்குக் கண்ணதாசன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, முடிந்தால் கண்ணதாசன் அவர்களின் சுயசரிதை வனவாசம் என்கின்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் திராவிடத் தலைமைகளைப் பற்றி அவர் மிகவும் மேலோட்டமாகத் தான் கூறியிருக்கிறார் ஆனால் அவைகளை எழுத்தில் கூடக் கொண்டுவர கூசும் ஒழுக்கக் கேடுகள் நிறைந்திருக்கும். கருணாநிதி அவர் நெருங்கிய அரசியல் திரைப்படத் தோழர் ஆதலால் கூடுதல் தகவல்களைச் சொல்லியிருக்கிறார். ஆரம்பமே இப்படி அமைந்துவிட்டதால் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிக்கு வருவோம்.

பிரியாணிக்கும் திமுகவினருக்கும் ஏழாம் பொருத்தம் தான், பிரியாணியை விரும்பி சாப்பிடாதவர்கள் யாரும் இங்கே இருக்கவே முடியாது ஆனால் பிரியாணினு பேரைக் கேட்டாலே திமுக ஞாபகம் வரும் அளவிற்குத் திமுக வளர்ந்திருக்கிறது. கரூர் தெற்கு காந்திகிராமம் இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). இவர் அதே பகுதியில் கரூர் பிரியாணி சென்டர் என்ற பெயரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடை வியாபாரத்தை முடித்துக் கடையை மூடிக் கொண்டு இருந்தபோது, தெற்கு காந்திபுரம் காந்திகிராமம் சக்தி நகரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 32) என்பவர் தனக்குப் பிரியாணி வேண்டும் என்று குடிபோதையில் கேட்டுள்ளார், அதற்குக் கிருஷ்ணன் பிரியாணி தீர்ந்துவிட்டது கடையை மூட போகிறோம் என்று கூறியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் குடிபோதையில் அவரைத் திட்டிவிட்டு உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறி சென்றவர் தனது தம்பி யுவராஜ் (வயது 28) என்பவருடன் மீண்டும் பிரியாணி கடைக்கு வந்துள்ளார்.

அப்போது கடை பூட்டப்பட்டு இருந்ததால் கடை மீது கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார், மேலும் கடைக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமரா, டியூப்லைட், சிக்கன் கிரில் பாக்ஸ் ஆகியவற்றை உருட்டு கட்டையால் அடித்து உதைத்துள்ளார். இது குறித்துக் கிருஷ்ணன் பசுபதிபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் பக்கத்துக் கடையில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது கார்த்திகேயன் மற்றும் யுவராஜ் பிரியாணி கடையை அடித்து உடைத்த காட்சிகள் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து பசுபதிபாளையம் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன், 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கார்த்திகேயன் மற்றும் யுவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கார்த்திகேயன் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர் என்பதும் தற்போது திமுக வில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது நடந்த கதை நடந்து கொண்டிருக்கிறா கதை. தமிழர்கள் தரம் தாழ்ந்த திமுகவை பொறுத்துச் சகித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது நாம் முதல் வரியில் சிந்திய தத்துவத்தை மீண்டும் பார்ப்போம். திமுகக் கட்சியின் சராசரி உறுப்பினரை எடுத்துக் கொள்வோம் அவர் இன்று வரை கற்ற,கேட்ட,பார்த்த விடையங்களை வைத்து தான் பிரியாணி கடையை உடைக்கும் அளவிற்குப் போயிருக்கிறார்… அஃது அவர் தவறா இல்லை திராவிடத்தை உருவாக்கியவர்கள் தவற… நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!