0

நாங்கள் தீக்குளிக்க வேண்டுமா…

சுடுகாட்டு பிணங்களே
நாங்கள்
தீக்குளிக்க வேண்டுமா…

தமிழனாய்
இருந்து கொண்டு
திராவிடனுடன்
கூத்தடிக்கும் இழிவானவர்களே
நாங்கள் தீக்குளிக்க வேண்டுமா

தமிழனாய்
இருந்து கொண்டு 
ஆரியனுடன்
கூத்தடிக்கும் இழிவானவர்களே
நாங்கள் தீக்குளிக்க வேண்டுமா

எதிரிகளை 
கூட
மன்னிப்போம் 
துரோகிகளே!
உங்கள் சுவாசம் கூட
எங்கள் பிணங்களை
அண்டாமல்
போகட்டும்.

என் மொழி
வைத்து
ஏமாற்றும் 
துன்மார்க்க துயரங்களே
நாங்கள் தீக்குளிக்க வேண்டுமா

வளமையாய் வாழ்ந்து கொண்டு
ஏளனமாய் 
பேசும்கேடு மதியரே
நாங்கள் தீக்குளிக்க வேண்டுமா

என் அடையாளம்
திருடி
என்னை ஏய்த்துப்
பிழைக்கும் நயவஞ்சகர்களே
நாங்கள் தீக்குளிக்க வேண்டுமா  

அதிகார திமிரில்
ஆட்டம் போடும் 
திருடர்களே
நாங்கள் தீக்குளிக்க வேண்டுமா  

எங்கள்
அவயங்கள்
எரிந்தாலும்
எங்கள் 
அடையாளம்
எரிந்தாலும்
மீண்டு வருவோம்
மீண்டும் வருவோம் 

எழுவர் விடுதலை
எங்கள் இனத்தின்
விடுதலை 
செங்கொடி,முத்துக்குமார்
கேட்டிருப்பீர்களே
இந்த
பெயர்களை 
எங்கள் மேதகு
பெயர் கேட்ட
சிங்களவன்
போல்
நடுங்கியிருப்பீர்களே…
உங்கள் நடுக்கத்தை
குறையுங்கள்
உங்கள் கேவல
உயிர்கள்
ஊசலாடுகிறது!

தமிழனென்று
ஒரு
இனம்
துரோகிகளையும்
எதிரிகளையும் 
ஓங்கியடிக்க 
கிளம்பி விட்டது
வழியை விட்டு
விலகி நில்லுங்கள்
இல்லை 
சிதறடிக்கப்படுவீர்.

இனி
யாரும்
தீக்குளிக்க
தேவையில்லை 
அறிவுத்தீ கொண்டு
உங்களை 
பொசுக்கி விடுவோம்
வீணர்களே
எழுவர் விடுதலை
இனத்தின் விடுதலை 

வீரதமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம்!!! 

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!