0

மரணித்தாலும் மனிதப் புனிதரா, வைகோ தான் சொல்லவேண்டும்!

தமிழர்கள் நாம் இன்று ஒரு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம், என்ன விடயம் என்றால் இந்தியாவின் முன்னாள் சனாதிபதி இயற்கை எய்திவிட்டார், பல தமிழக அரசியல்வாதிகள் அரசியல் மாண்பு என்று அவருக்கு இரங்கல் செய்தி வெளியிடுகின்றனர். வைகோ போன்ற மனித புனிதர்கள் 2009 அன்று பிரணாப் முகர்ஜியை பற்றி என்ன பேசினார்கள் என்று ஒரு முறை நாம் திரும்ப பார்க்கவேண்டும், 2009 ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் குண்டுகளால் உடல் கருகி இறந்த போது இதே நபர் தான் வெளியுறத்துறை அமைச்சராக இருந்தார். ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்திருக்கும் போது மனித உயிர்களைத் துச்சமாக எண்ணி எதைச் செய்கிறோம், இதனால் எதிர் காலத்தில் என்ன விதமான அனர்த்தங்கள் நிகழும் என்கின்ற எந்தப் புரிதலும் இல்லாமல் நடக்கும் அரசியல்வாதிகளைத் தமிழர்கள் தூசை தட்டுவது போல் தட்டிவிட்டு போய்விடுவார்கள்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் MK நாராயணனும், வெளியுறவு செயலாளர் சிவசங்கர மேனன்னும் இந்தியாவின் முன்னாள் சனாதிபதி பிராணப் முகர்ஜியும் ஈழத்தின் இனப்படுகொலையை எளிதாகக் கடந்து செல்ல முடியாது, தற்சமயம் நார்வே நாட்டில் இருந்து ஈழத்திற்கான அமைதி தூதராகச் செயல்பட எரிக் சோல்கிய்ம் அவர்களை உலகத் தமிழர்கள் கீச்சில் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருக்கின்றனர், எப்போதும் போல் பொருந்தாத பதில்களை அவர் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பல இடங்களில் சிங்களவர்கள் பயன்படுத்திக் கொண்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கின்றனர். கருணாநிதி இறப்புக்குத் தமிழர்கள் ஊடகங்களில் காட்டிய எதிர்வினை போல் இந்தியாவின் முன்னாள் சனாதிபதி பிராணப் முகர்ஜி இறப்புக்கும் தமிழர்கள் எதிர்வினை காட்ட வேண்டியதாகிவிட்டது. இனி இப்படித்தான் இருக்கும் தமிழனிடம் மட்டும் அறத்தை எதிர்பார்ப்பது, எதிரிகளும் துரோகிகளும் தமிழனை அடியோடு சாய்ப்பது இனி நடவாது.

என்ன தான் தீவிர அரசியல் பேசினாலும் சாதாரண மனிதனாகத் திரைப்படங்கள் நம்மைப் பல சமயங்களில் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்துவிட்டு போய்விடும், அப்படி மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்துவிட்டு போன ஆலிவூட் திரைப்படம் தான் Black Panther (கருஞ் சிறுத்தை) அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் சாட்விக் போசுமன் (Chadwick Boseman) மிகவும் எளிய நடையுடை பாவனையில் அந்தத் திரைப்படத்தில் அசத்தி இருப்பார். மிகவும் கடினப்பட்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வந்தவர் புகழின் உச்சியில் தீடீர் என்று மரணித்திருப்பது பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

இந்தியாவே ஒருவர் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறது என்றால் அஃது ஒருவர் தான் அவர் தான் பிரசாந்த் பூசன் , அவர் ஒரு ரூபாய் பணத்தை உச்சநீதி மன்றத்தில் அபராதம் கட்டுவதை விட மூன்று மாதம் சிறை செல்வதே வரலாறாகா மாறி விடும் அதற்குக் காரணம் , ஒரு ரூபாய் தானே என்று அபராதம் கட்டிவிட்டு போனாா் என்றால், அது மிகப்பெரிய அவமானமாகிவிடும், இஃது அவரின் தன்மானத்துக்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சோதனையாகும். மன்னிப்பு கேட்க மாட்டேன், எனக்குத் தண்டனை கொடுங்கள் என்று சொன்னார் பிரசாந்த் பூசன் ஆகவே அவரை ஒரு ரூபாய் அபராதம் கட்ட வைத்து அவமானப் படுத்த திட்டமிட்டே தான் இந்த அபராதம் விதித்திருக்கிறார்கள். ஒரு ரூபாய் என்பது ஒரு பெரிய தொகையாய் இல்லலாமல் ஓர் அடையாளமாக இருந்தாலும் மன்னிப்பு கேட்பதும் , ஒரு ரூபாய் அபராதம் விதிப்பதும் ஒன்று தான். அஃதாவது ஒரு ரூபாய் அபராதம் கட்டிவிட்டால் அடிப்பணிந்து விட்டாா் என்றே அா்த்தமாகிவிடும். பிரசாந்த் பூசன் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டுமானால், என்னால் நீதி மன்றம் விதித்த அபராதத் தொகையைக் கட்ட முடியவில்லை என்று சொல்லிவிட்டுச் சிறை சென்றால் நிச்சயம் அவரை வரலாறு நின்று பேசும், கருத்துச் சுதந்திரமும் காப்பாற்றப்படும். அவரை அவமானப்படுத்த நினைத்த நீதிபதிகள் வெட்கித் தலைகுனிவார்கள். நிச்சயம் செய்வார் என்று எதிர்பார்ப்போம்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!