0

அண்ணாமலை IPSம் RSS விசிறிகளும்!

நேற்று அண்ணாமலை IPS பற்றி ஒரு காணொளியை விட்டதும், இந்துத்துவா கூட்டம் சாரிசாரியாக வந்து நான் திராவிடன் 200 ரூபாய் உபி என்று அமர்க்களம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். என் வளையொலியில் இருக்கும் ஒரு சில காணொளிகளைப் பார்த்தாலே உண்மை அவர்களுக்கு விளங்கியிருக்கும் ஆனால் அவர்களுக்கு அதற்கு எல்லாம் நேரம் இல்லை. அண்ணாமலை IPS பற்றி எப்படிப் பேசலாம் அதுவும் ஒரு கிறித்தவர் எப்படிப் பேசலாம் என்று அவர்களின் மதவெறியை தூவ ஆரம்பித்தனர். அண்ணாமலை IPS பற்றி ஒரு நபர் காணொளி போடுகின்றார் அவர் எப்படி IPS தேர்வை எழுதினார் என்று சொன்னால் கேள்வி கேட்பவர்களின் மதத்தையா பார்ப்பது, அது முற்றிலும் தவறு. இந்துத்துவவாதிகள் அனைத்தையும் மதத்தை வைத்து அணுகுவதால் தான் உண்மை அவர்களுக்குத் தெளிவாய் தெரிவதில்லை.

தனது கல்வி தகுதியை குறை சொன்னால் அவர் தான் தன்னிலை விளக்கம் அளிக்கவேண்டும் அதை விடுத்தது சொல்லுபவர்களை மத அடிப்படையில் எதிர்ப்பது வேண்டாத வேலை. இன்னொரு விடயம் என்னவென்றால் கருத்துரை தெரிவித்த அனைவரும் சாமர்த்தியமாகப் பாரதீய சானதாவில் ரவடிகள் இணைவதை பற்றி எந்தக் கருத்தையும் கூறவில்லை. உண்மையில் அண்ணாமலை காவற் துறையில் ஒழுங்காக வேலை பார்த்திருந்தால் ரவுடிகளைக் கட்சியில் சேர்ப்பதை எதிர்த்து கருத்து சொல்லி இருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்தாரா என்ன.

நமக்கும் அண்ணாமலைக்கும் என்ன வாய்க்கா தகறாரா என்ன கன்னடராக உணரும் அவர் கர்நாடகாவில் அரசியல் செய்யட்டும், தமிழருக்குச் சம்பந்தம் இல்லாத பாரதீய சானதாவை தமிழ்நாட்டில் கொண்டுவர தமிழர் என்கின்ற அடையாளத்தில் வந்திறங்குவது, பாரதீய சானதா என்கின்ற கட்சி பெயரை கூடப் பாரதிராஜா கட்சி என்பவரை தமிழர்கள் ஏன் இரத்தின கம்பளம் விரித்து வரவேற்க வேண்டும். அரசியல் விழிப்புணர்வு இல்லாத அண்ணாமலை எல்லாம் தமிழ்நாட்டு அரசியலில் கரைந்து காணாமல் போய்விடுவார் என்பது உறுதி!

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!