ஒரு சின்ன கதை…
அது 2020இம் ஆண்டுத் தமிழர்கள் இந்தி ஆதிக்கத்தை அடக்க முடியாமல் போரடிக் கொண்டிருந்தார்கள், எங்கும் இந்தி எனும் அரக்கன் தமிழை அழிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. ஆரிய இந்துத்துவா காட்டு தர்பாருக்கு எதிராகத் திராவிடர்கள் கொதித்து எழுந்தனர் தமிழ் மொழியைக் காக்க முடியாவிட்டால் தமிழர்கள் ஓட்டுக்களை எப்படிப் பெறமுடியும் என்கின்ற ஓட்டு வேட்கை இதுவரைஅவர்கள் நடத்திய பல வெற்று அடையாள போராட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக நினைவூட்டியது. “இந்தி தெரியாது போடா” என்று அங்கங்கே புரட்சி குரல்கள் ஒலித்தன, வார்த்தையால் இருந்தால் மட்டும் போதாது கொஞ்சம் காசும் பார்க்க வேண்டும் என்று வந்தது தான் இந்தி தெரியாது போடா T-Shirt புரட்சி. இந்தப் புரட்சி மட்டும் வரவில்லை என்றால் தமிழ் என்றோ அழிந்து போயிருக்கும். திராவிடர்கள் மட்டும் இல்லை என்றால் இன்று நாம் “மேரா பாஷா இந்தி ஹே” என்று சொல்லும் இழிவு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்போம். திராவிடர்கள் தமிழர்களுக்கு வேட்டி,சேலை கொடுத்து மானத்தைக் கொடுத்தது போல் நமது மொழியையும் காப்பாற்றினர் ஆகையால் நம் உயிர் பிரியும் வரை அவர்களுக்குத் தான் நாம் வாக்களிக்க வேண்டும்.
எப்படி இருக்கு “இந்தி தெரியாது போடா” T-Shirt புரட்சி வரலாறு, பத்து வருடம் கழித்து இது போன்று தான் இருக்கும் Wiki பக்கண்களில், யுனெசுகோ பார்வையில் ஈவேரா என்று நமக்கே விபூதி அடித்த கூட்டம் இன்று “இந்தி தெரியாது போடா” என்று T-Shirt புரட்சியை ஆரம்பித்திருக்கிறது. அடையாள போராட்டங்களையே மக்கள் சக்தி போராட்டம் போல் இவர்கள் நடத்த முனைவது, அதற்கு மூளையைக் கசக்கி இது போன்று T-Shirt வாங்க வைக்கும் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. முப்பத்தொன்பது MPஇக்களை வைத்து சாதிக்க முடியவில்லை, மக்களை ஏமாற்ற “இந்தி தெரியாது போடா” T-Shirt புரட்சியா ?
தமிழைத் தவிர எல்லா மொழிகளும்…
இந்துத்துவவாதிகள் இந்தியை புகுத்துவது திராவிடர்கள் அதை எதிர்ப்பது போல் ஒரு நாடகத்தைத் தமிழர்களை ஏமாற்ற நடத்துவது எல்லாம் பார்த்து பார்த்துப் புளித்துப் போய்விட்டது. தமிழைத் தவிர எல்லா மொழிகளும் தமிழ்நாட்டில் நன்றாய் தான் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஏமாந்த தமிழ் இனம் தான் மொழிக்காக உயிரை கொடுத்தும், தன் மொழியைத் தன் இனத்திற்குக் கற்றுத் தர கூடத் தமிழாசிரியர் வேலைக்குக் கூடப் போராட வேண்டிய நிலையில் இருக்கிறது. அடுத்தவன் போராட்டத்தை அவனுக்கே தெரியாமல் ஆட்டை போடும் ஈவேரா வாரிசுகளுக்குத் தமிழினம் தொடர்ந்து ஏமாந்து கொண்டிருக்காமல் புரிந்து நடந்து கொள்ளுங்கள். நாம் சொல்லவேண்டியது தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் தமிழ் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதே, வடக்கில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவனிடம் “இந்தி தெரியாது போடா” என்றால் அவனுக்குப் புரியுமா என்ன, ஓர் இந்திக்காரனுக்காவது நாம் இப்படிச் சொன்னால் புரியுமா என்ன… தமிழன் மற்றவர்களை ஒருமையில் பேசமாட்டான், ஒருமையில் பேசுவது திராவிடன் புத்தி அதைத் தமிழர்களிடம் திணிப்பதை கூட நாம் ஏற்கமுடியாது. இப்படிச் சொல்லுங்கள் “இந்தி தெரியாதுப்பா, தமிழ் கத்துக்கப்பா” திராவிட ஆரிய கூடுகளவாணிகளிடம் தமிழர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேடுவதை நிறுத்துங்கள்!
மீண்டும் சந்திப்போம்…