0

கொல்லப்பட்ட தமிழர் மெய்யியல் | Tamilam not Hindutuva| @TamilanSankar.com

தமிழர்கள் கடவுளை வழிபட்டால் திராவிடக் கூட்டம் பகுத்தறிவு இல்லை காட்டுமிராண்டிகளின் மொழிக் கூட்டம் அவர்களைத் திராவிடர்கள் நாங்கள் தான் செம்மைப்படுத்தினோம் என்று சொல்வார்கள். தமிழர்கள் கடவுளை வணங்குகிறார்களே என்று நாம் யோசித்தால் தமிழ் இன முன்னோர் வகுத்த மெய்யியலை முழுவதும் இந்துத்துவவாதிகளிடம் களவு கொடுத்து அவர்களிடமே மெய்யியல் கட்டமைப்புகளின் தலைமையைக் கொடுத்துவிட்டு அடிமைகளை அவர்களிடம் ஆசிவாங்கிக் கொண்டிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. தமிழில் ஒரு சொல்லடை இருக்கிறது முன்னாள் போனால் கடிக்கும் பின்னல் போனால் இடிக்கும் என்று அது முழுக்க முழுக்க இந்த விடயத்தில் சரியாய் இருக்கிறது.


இராமலிங்க அடிகளார்
யார் இராமலிங்க அடிகளார், யார் வள்ளலார், அவரின் வல்லமை என்ன ?
அருளாசிரியர்இதழாசிரியர்இறையன்பர்உரையாசிரியர்சமூகச் சீர்திருத்தவாதிசித்தமருத்துவர்சிறந்த சொற்பொழிவாளர்ஞானாசிரியர்தீர்க்கதரிசிநூலாசிரியர்பசிப் பிணி போக்கிய அருளாளர்பதிப்பாசிரியர்போதகாசிரியர்மொழி ஆய்வாளர்பண்பாளர்
இத்தனை வல்லமை பொருந்திய அவரின் மரணம் இன்றும் புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
“சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி’’

“சாதி மதம் சமயமெனும் சங்கடம் விட்டு…
சாத்திரம் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டு’’

“கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக’’

“சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்’’

“இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயல் எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம
வழக்கமெல்லாம் குழிக்கொட்டி மண்மூடிப்போக’’

“நால்வருணம் ஆச்சிரம ஆசாரம் முதலாம்
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை விளையாட்டே’’

“சாதியைநீள் சமயத்தை மதத்தையெலாம்
விடுவித்தென் றன்னை ஞான
நீதியிலே சுத்த சிவ சன்மார்க்க
நிலைதனிலே நிறுத்தியருளிய’’

“மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டியே இருட்டியே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்து வீண் பொழுது
நிலத்திலே போக்கி மயங்கி யேமாந்து
நிற்கின்றார்.’’

“மதமெனும் பேய் பிடித்தாட ஆடுகின்றோர்
தோத்திரஞ் செய்து ஆங்காங்கே தொழுகின்றார்.’’

“சாதிசமயங்களிலே விதிபல வகுத்த
சாத்திரக் குப்பைகள் எல்லாம் பாத்திரம் அன்று’’

-என்று வேத சமயத்தைக் கடுமையாகச் சாடியவர் நமது வள்ளலார்.

இன்று இந்துத்துவாதிகள், வெள்ளையுடை போட்டு வந்த வள்ளலாரை இந்துமத மாகானாகக் காவி பூச தயாராகிவிட்டனர். தமிழ் இனம் தன் அடையாளங்களை முழுதும் உணரும் நாளே திராவிட, இந்துத்துவவாதிகளின் கொடூர பிடியில் இருந்து விடுதலை பெற முடியும். தமிழர்களின் ஒவ்வொரு அடையாளங்களும் களவாடபட்டுத் தமிழர்களே இது நமது தானா என்று கேட்கும் நிலையில் தான் நமது அரசியல் அறிவு இருக்கிறது. வள்ளலார் ஒருவர் போதும் இந்துத்துவாதிகளின் தூக்கத்தைக் கெடுக்க நாமோ பகுத்தறிவு பகலவன் என்று பொருத்தமில்லாத நபர்களைப் புகழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாள் இது மாறும்.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!