0

விஜய்சேதுபதி மேல் தவறு இல்லை! | No Issue with VijaySethupathi | @TamilanSankar.com

என்னடா இப்படி ஒரு தலைப்பு, இவனுக்கு என்ன கிறுக்கு பிடித்து இருக்கா என்று எந்தச் சந்தேகமும் கொள்ளவேண்டாம். விஜய்சேதுபதி இது போன்ற படங்களில் நடிக்கவில்லை என்றால் தான் நாம் ஆச்சர்யப் படவேண்டும். தமிழ்த் திரைப்பட உலகம் என்று நாம் சொல்வதே கேலிக் கூத்து தான். தமிழர்கள் கூலி வாங்கி வேலை செய்து கொடுக்கும் ஒரு துறைக்கு, தமிழர்கள் யாரும் தலைமையில் இருக்கமுடியாத இந்தத் துறைக்குப் பெயர் என்ன தெரியுமா ” தென்னிந்திய நடிகர் சங்கம் ( South Indian Film Artistes’ Association – SIFAA )”. இது போன்று பெயரிருக்கும் ஒரு துறையில் இருந்து தமிழர் இனம் சார்ந்து திரைப்படங்கள் வரும் என்று நாம் எதிர்பார்ப்பதே பெரும் தவறு.

விஜய்சேதுபதி மேல் தவறு இல்லை!

தமிழர்களாய் இருக்கும் பலரே தமிழர் விரோத நடவடிக்கைகளில் எந்தக் கூச்சமும் இன்றித் துரோகம் செய்து கொண்டிருக்கும் போது, தெலுங்கர் என்று சொல்லப்படும் விஜய்சேதுபதி தமிழர் இனம் சார்ந்த படங்களில் மட்டும் தான் நடிக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது எப்படிச் சரியாய் இருக்கும். தமிழர்கள் திரைப்படம் பார்க்க நுழைவுசீட்டு வாங்குதல், திரைப்பட அரங்கு வாசல்களில் வைத்திருக்கும் நடிகர்களின் நீண்ட நெடிய பாதாகைகளுக்குப் பால் ஊற்றுவது, உலகில் நடக்கும் எந்த நிகழ்வுகளையும் கவனிக்காமல் திரைப்பட நடிகர்களுக்காக வெறித்தனமாகச் சமூக ஊடகங்களில் சண்டை போடுவது போன்ற மிகச் சிறந்த தமிழர் இன சேவைக்கு மட்டும் தான் அதைத் தாண்டி அரசியல் தெளிவு அடைந்துவிட்டால் இது போன்று தமிழர் விரோத படங்களில் நடிக்கவெல்லம் நிச்சயம் தைரியம் வராது.

தமிழர்களுக்காகப் போராடிய தமிழர் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகைப்படங்களும், பாதாகைகளும், சிலைகளும் அகற்றப்படும் தமிழர் நிலத்தில் இந்தப் படத்தின் பெயரில் ராஜபக்சே படங்களும் அடாவடி நாடான இலங்கையின் சிங்களக் கொடியும் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பப்படும். “யாதும் ஊரே! யாவரும் கேளீர்!” என்று சகிப்புத்தன்மையின் உச்சம் தொட்ட இளிச்சவாய் தமிழர் இனம் கையறு நிலையில் வேடிக்கை பார்க்கும் இதற்கும் விஜய்சேதுபதிக்கும் என்ன சம்பந்தம் அவர் பணம் பெற்று நடிக்கும் ஒரு நடிகர் தானே.

சுடலை, ரசினியிடம் கேட்போமா?


தமிழர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் “அண்ணா பல்கலைகழகம்” பற்றியெல்லாம் நாம் பேசிப் பிரச்சனை பண்ணிவிடக்கூடாது… எடு ஈழத்து பிரச்னையைத் தமிழன் அதில் கவனம் செலுத்தும் போது தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கும் அனைத்து தமிழர் விரோத செயல்திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இப்ப நாம “அண்ணா பல்கலைகழகம்” பறிபோக இருப்பதைப் பற்றிப் பேசலாமா இல்லை விஜய்சேதுபதி பற்றிப் பேசலாமா… சுடலை,ரசினி என்று ஆகப் பெரிய தமிழ்த்தலைவர்களிடம் கேட்டு வாருங்கள் போராடலாம்…

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!