0

பாமக போராட்டம்! ஆரம்பியுங்கள் உங்கள் பொழிப்புரைகளை!

தமிழர் அரசியல் என்று வந்து விட்டால் புது விதமான சோதனை நமக்கு வந்து விடுகிறது. இந்துத்துவ அமைப்புகள் செய்யும் மத அரசியல் போராட்டங்களும், திராவிடம் நடத்தும் அடையாள போராட்டங்களும், மிக எளிதாக பொது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக மாற்றப்படுகிறது. தமிழர் மண் சார்ந்த போராட்டங்களை யார் எடுத்தாலும் அதில் வன்முறை, சாதிய நோக்கம், வெளிநாட்டு உதவி என்று ஏதாவது ஒரு பரப்புரை எளிதாகப் பரப்பப்படுகிறது.

யார் அன்புமணி, யார் சீமான், யார் ஸ்டாலின், யார் அண்ணாமலை என்பது அவரவர் செயல்பாடுகளில் இருந்து நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம். ஒன்று அரசியலை அரசியலாகப் பாருங்கள் இல்லை போராட்டங்களைப் போராட்டங்களாகப் பாருங்கள் இரண்டுக்கும் மத்தியில் பரப்புரையில் மதி மயங்காதீர்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி போராடினால் அது வன்முறை, திமுகா செய்தால் அது மக்களுக்கான போராட்டம் என்று பொழிப்புரை எழுதுவது பேசுவது மிகவும் வேடிக்கை.

அன்புமணி அரசியலுக்காகவே செய்யட்டும் அதனால் தமிழர் மண்ணுக்கு நன்மை நடந்தால் மகிழ்ச்சியே!

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!