0

மீரா மிதுன், கமலா ஆரிசு என்ன ஒரு கொடுமை!

நம்ம ஊருல ஒரு பழமொழி ஒண்ணு சொல்வாங்க, மேய்ற மாட்டை நக்குற மாடு கெடுத்த மாதிரினு அது இந்த மீரா மிதுன் விடயத்தில் சரியா போச்சு, ஏற்கனவே வேலை வெட்டிய விட்டுட்டு அவனவன் விசய் ரசிகர், அசித் ரசிகர், சூர்யா ரசிகர்னு சுத்திகிட்டு இருக்குறானுங்க, இதுல அவனுங்கள உசுப்பேத்தற மாதிரி இந்தப் பொண்ணு பேசப்போக ஒரு வாரமா இந்த கூத்து தான் சமூக ஊடகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் EIA 2020, NEP அப்படினு உறுப்புடாத எல்லா திட்டத்தையும் இந்தியாவை ஆளும் இந்துத்துவா அரசு மக்கள் மேல திணிச்சுக்கிட்டு இருக்கு அத பத்தி எங்க மக்கள் பேச ஆரம்பித்துவிடுவானுங்களோனு புதுப் புது யுக்தியாய் இவனுங்க வனிதா, மீரா மிதுன் என்று தரைமட்டத்திற்கு இறங்கி மக்களை திசை திருப்புறானுங்க.

எழுபது வருட திராவிட ஆட்சியில் மக்களை முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கில் முக்கி எடுத்து இப்ப சமூக ஊடகம் மூலம் முழுக்கிருகனாக்கி அலையவிட்டுட்டானுங்க. இது எங்க போய் முடியும்னு தெரியல. கொரோனாவில் அவனவன் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்க அதைப் பத்தியெல்லாம் பேச யாரும் இல்ல, வனிதா எங்க போனா நமக்கு என்ன மீரா மிதுன் எங்க போனா நமக்கு என்ன, ஒரு தெளிவு வேண்டாமா ?

இத விடப் பெரிய கொடுமை அமெரிக்க துணை சனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பாக கமலா ஆரிசு என்கின்ற பெண் அறிவிக்கப்பட்டிருக்காங்க, எல்லா சங்கியும் அவர் ஐயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தூக்கி கொண்டாடுறானுங்க, அவங்க யாருனு தேடிப்பார்த்தா அவங்க அமெரிக்காவில் பிறந்தவங்க, அப்பா சமைக்கான்காரர் கறுப்பினத்தைச் சேர்ந்தவர், அவர் கணவர் ஒரு யூதர், கமலா ஆரிசை பொறுத்த வரை அவர் கறுப்பின பெண்ணாக தான் அமெரிக்கால காட்டிக்கிறார்… இந்தச் சங்கீகள் தொல்லை தாங்க முடியல…
நம்ம பசங்க மீரா மிதுன் கூட சண்டைபோட, சங்கீகள் அவனுங்க தனி உலகத்தில பரவசமடைய…

திராவிடனுங்க பாடு திண்டாட்டம் தான் பத்து வருசமாச்சு ஆட்சி செஞ்சு, எப்படியாவது உலகெங்கும் இருக்கும் தமிழர்களை ஏமாற்றி தமிழ்நாட்டு ஆட்சியை பிடிச்சுடணும்னு போராடிகிட்டு இருக்கானுங்க. ஓலைச்சுவடி பற்றிக் கேள்வி கேட்ட மின்சாரத்துல கை வச்ச மாதிரி கதறானுங்க. தமிழ் மொழியை பல வடிவங்களில் விக்கிறானுங்க, தமிழர்களை அரசியல் படுத்தாமல் முட்டாளா திரியவிட்டிருக்கானுங்க, கருணாநிதி, செயலலிதா இருந்தப்ப கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்த நாம் இன்னைக்கு கண்ணை திறந்து வச்சே காட்டில் விட்ட மாதிரி இந்துத்துவ ஆட்சியில மாட்டியிருக்கோம், கொஞ்சம் யோசிச்சு பிழைச்சுக்குங்க… அடுத்து என்ன வீக் எண்டு வந்திருருச்சு… மீண்டும் சந்திப்போம்….

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!