0

தமிழ்பொக்கிசம் விக்கி,இடஒதுக்கீடு, பெட்டி கோவாலு!

என்ன சொல்வது என்று தெரியவில்லை, ஒரு நாட்டின் குடிமகனுக்கு உணவு,உடை,உறைவிடம் எப்படி ஓர் அடிப்படையோ அது போல், நாகரீக உலகத்தில் கல்வி என்பது ஓர் அடிப்படை உரிமை, இந்திய போன்று பல தேசிய இனங்கள், பல மொழிகள் பேசப்படும் நாட்டில் அனைவருக்கும் சரிசமமான கல்வி என்பது தேவையான ஒன்று, மேலெழுந்து வரமுடியாத சமுதாயங்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து அவர்களை முன்னேற்று வேண்டும் என்ற போது அதை இழிவாகப் பேசிக் கொண்டிருந்த ஒரு கூட்டம் இன்று தனக்குக் கிடைத்த பொருந்தாத இடஒதுக்கீடை மட்டும் முகமலர்ச்சியோடு வாங்கிக் கொண்டு பேச்சு மூச்சில்லாமல் இருப்பது பெரிய விந்தை தான்.

அவர்கள் இந்த இடஒதுக்கீட்டை கொண்டுவரும் போது முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு இடஒதுக்கீடு என்கின்றனர், அஃது எப்படி முன்னேறிய வகுப்பினரில் மட்டும் தான் பொருளாதரத்தில் பின்தாங்கியவர் இருப்பார்களா… இடஒதுக்கீடு என்கின்ற உயர்ந்த விடயத்தை முழுக்க முழுக்கப் பாழ்படுத்திவிட்டனர், அது தான் அவர்களின் லட்சியமும் கூட. பணம் இருந்தால் தான் படிக்க முடியும் என்கின்ற கொடிய நிலை ஒரு குறிப்பிட்ட சாராரை உயர்த்தியும் பெரும்பாலோனரை எழுந்திரிக்க முடியாமல் செய்யும் குயுக்தி, அதை இந்திய அதிகாரவர்க்கம் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது.

ரொம்ப நாளாக உறுதிக் கொண்டிருக்கும் ஒரு விடயம் இந்தத் தமிழ் பொக்கிசம் வலையொளி விக்கி, நானும் ரொம்ப நாளா அவருடைய காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், பல விடயங்களை நேரம் ஒதுக்கி அவர் காணொளிகளாய்ப் போட்டுக் கொண்டிருக்கிறார், அவரது கடுமையான உழைப்புக்கு என் வாழ்த்துக்கள் ஆனால் முன்னுக்குப் பின் முரணாக அவரது காணொளிகள் இருப்பதை அவர் உணர்கிறாரா என்று தெரியவில்லை, அவரது பல அரசியல் காணொளிகளில் தான் சங்கீ இல்லை, தான் சங்கீ இல்லை என்று அவர் கூறுவதே மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஏகாதிபாத்தியதை தோலுருக்கிறேன் என்று சொல்பவர் அமெரிக்காவையும் சீனாவையும் ஒரே பார்வையில் தான் பார்ப்பார்கள், இவர் காணொளிகளைப் பார்த்தால் இந்தியாவை மையமாக வைத்து நாம் ஏகாதிபத்தியத்திற்குப் புது வரையைக் கொடுக்க வேண்டும் போல் இருக்கிறது, அதை விட இவரது அரசியல் காணொளிகளில் வந்து கருத்துரையிடுபவர்கள் தனி உலகத்தில் வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். சமூக ஊடகம் இது போன்ற விடயங்களில் தோல்வியைத் தழுவுவதாகவே கருதுகிறேன்.

நேற்று சுடெர்லைட் ஆலைக்கு எதிராகத் தீர்ப்பு வந்தவுடன் பகிரியில் ஒரு நண்பர் நமது திராவிடப் புயல் வைகோவின் மீம் ஒன்றை பதிவிட்டிருந்தார், பல ஆண்டுக் காலம் போராடி இந்தத் தீர்ப்பை தமிழ்நாட்டு மக்களுக்கு வாங்கிக் கொடுத்ததிற்கு வாழ்த்துத் தெரிவிப்பது போல் இருந்தது அந்தப் பதிவு, நமக்கிருக்கும் கேள்வி எல்லாம் திராவிடப் புயல் வைகோ உண்மையும் நேர்மையாக இருந்திருந்தால் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் முதல் தோட்ட வைகோ மேல் தானே பாய்ந்திருக்கும், அப்படி நடக்கவில்லையே, எனது கேள்வி சரிதானே, திராவிடத்தின் ஒவ்வொரு அசைவையும் கண்டும் காணாமல் நாம் போகாமல் நிச்சயம் கேள்வி எழுப்ப வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!