0

கல்யாணசுந்தரம் கொஞ்சம் பொறுமை! | Seeman| NTK | @TamilanSankar.com

இந்தக் காணொளி போடலாமா இல்லை வேண்டாமா என்று பலமுறை யோசித்துப் போடவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது, என்ன ஒரு பெரிய விடயம் என்றால் நமக்குத் தெரிந்த சிலருடைய பிரச்சனைகள் பொது வெளியில் பேசப்படும் பொது நம்மை அறியாமல் சில விடயங்களை ஊகித்து விட முடியும். சீமான் அண்ணன், கல்யாணசுந்தரம் , பாக்கியா என்று சமூக ஊடகங்களில் இன்று பேசுபொருளாக ஆகிவிட்டனர். நேர்மறை செய்தியாக வர வேண்டியவர்கள் எதிர்மறை செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றனர். அவரவர் பங்கிற்குக் கட்சிக்கு எவ்வளவு பாடுபட்டனர் என்பது உலகறிந்த விடயம், உள்கட்சி அரசியல் என்பது எந்த ஒரு கட்சிக்கும் பலம் சேர்க்காது அதே சமயத்தில் அது காலசூழலில் நீர்த்துப் போகத் தான் சத்தியம் அதிகம்.

என்னைப் பொறுத்தவரை தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம். நீராடித்து நீர் விலகுவது இல்லை. திராவிடர்கள் கடும் முயற்சி கொண்டு பல பல யுக்திகளைக் கொண்டு தமிழர்களைப் பிரித்தாள முயற்சிக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி என்கின்ற இளைஞர் படை இன்னும் பல தாக்குதல்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அதற்கு இப்போது நடக்கும் நிகழ்வுகளைப் படமாக்கிக் கொள்ளுங்கள்.

அண்ணன் சீமான் சார்பாகப் பேசுபவர்களும், கல்யாணசுந்தரம் சார்பாகப் பேசுகிறவர்களும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உங்கள் உரையாடல்களைப் பார்த்துக் கொண்டு சுந்தரவள்ளியும்,சவுக்குசங்கரும் பெரிய சாதனை செய்துவிட்டதாகக் கைகொட்டி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து கொண்டு சிலர் எழுதும் முகநூல் பதிவையும், கீச்சு பதிவையும் பார்த்தல் எரியும் நெருப்பில் மண்ணெண்ணெய் ஊற்றுவது போல் இருக்கிறது. தமிழருக்கு என்று ஒரு கட்சி வருவதும் வளர்வதும் யாருக்கு சிக்கல் என்கின்ற புரிதல் இருந்தால் இந்தப் பிணக்குகள் காணாமல் போய்விடும்.

நாம் தமிழர் கட்சி என்பது அண்ணன் சீமானோ,கல்யாணசுந்தரமோ, பாக்கியாவோ இல்லை… தமிழர்கள் எல்லோரும் இணைந்தது என்பதே கடைமட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் தம்பிகள் எண்ணம்,யாருக்கும் அறிவுரை சொல்லும் இடத்தில் நான் இல்லை ஆனால் தமிழர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதில் ஏன் இவ்வளவு இடைஞ்சகள் என்பதை நாம் ஆய்வு செய்யவேண்டும். தமிழ் மொழியோ தமிழர் நலனோ யாருடைய தனிப்பட்ட இலக்கு இல்லை அது தமிழர்களின் இலக்கு. தமிழர்கள் நிறைந்திருக்கும் நாம் தமிழர் கட்சி அதை நோக்கி பயணிக்கும் என்று நம்புவோமாக.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!