0

நாம் தமிழர் வீழாது! | Seeman | Kalyanasundram | DMK | @Tamilansankar.com

உண்மை தான் நாம் தமிழரில் ஒரு சலசலப்பு இருக்கிறது அதுவும் தமிழர்களைத் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவின் வேலை நிச்சயம் இருக்கிறது, சுந்தரவள்ளி சொல்வது போலோ சவுக்குச் சங்கர் சொல்வது போல ஒன்றுமே செய்யாமல் கல்யாணசுந்தரம் பிரச்சனை பூதாகாரமானது என்பதை நிச்சயம் ஏற்கமுடியாது. ஏன் நாம் தமிழர் வலிமை திமுகவிற்கு அச்சத்தைக் கொடுக்கிறது அதுவும் சமூக ஊடகத்தில் வலிமையாய் பணத்தை இறைக்கும் திமுகவிற்குப் பெரும் தலையிடியை கொடுக்கிறது என்று நாம் நிச்சயம் யோசிக்க வேண்டும். திமுகவின் கட்டமைப்புகள் பலமாய் இருந்தாலும் தமிழருக்கு எந்த விதத்திலும் உதவாத அதன் ஏமாற்றுக் கொள்கைகள் அதை அழிவு பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. நாம் தமிழர் கட்சி திமுக அளவிற்குக் கட்டமைப்பில் வலிமை இல்லாவிட்டாலும் நாம் தமிழர் கட்சியின் வலுவான சமூக ஊடக கட்டமைப்புகள் கொடுக்கும் நெருக்கடிகளைத் திமுகவால் நேர்மையாக எதிர் கொள்ளமுடியவில்லை. திமுகவை எதிர்ப்பதில் அதிமுகச் சுத்தமாக ஒதுங்கிவிட்டது, பாரதீய சனதா திமுகவுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு திராவிடர் கழகத்திற்கு எதிராக மட்டும் காய்களை நகர்த்தித் திமுகவை எதிர்ப்பது போல் பாவனைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

திமுக கொடுத்த வேலைத்திட்டம்

சுந்தரவள்ளி,சவுக்குசங்கர்,கார்த்திகேய சிவசேனாதிபதி,கொளத்தூர் மணி என்று திமுகக் கொடுத்த வேலைத்திட்டம் மிக நேர்த்தியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்ணன் சீமான் காணொளிகள் பார்த்து பார்த்துச் சேர்ந்த தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள், உள்கட்சி பிரச்சனைகள் அயர்ச்சியைக் கொடுத்துள்ளது என்றால் அஃது உண்மை தான் முகநூலிலும் கீச்சுவிலும், வலையொளியிலும் நாம் தமிழர் கட்சியின் மீதான விமர்சனங்கள் ஆவேசமாக விவாதிக்கப்படுகின்றன. விமர்சனங்கள் கட்சியை எதுவும் செய்யாது, திருந்த வேண்டியவர்கள் திருந்த வேண்டும், திருத்தப்படவேண்டியவர்கள் திருத்தப்படவேண்டும் அது நிச்சயம் நடந்துக்கொண்டிருக்கிறது.

இன்னும் எத்தனையோ கூட்டம்

நேற்றுவரை மதித்துப் பேசியவரை உடனிருந்தவரை அண்ணன் சொல்லிவிட்டார் என்று அடுத்த நாளே தமிழின துரோகி என்று வசை பாட ஒரு கூட்டம், சீமான் அண்ணன் பேட்டியில் தலைமைப் பண்பு இல்லை என்று ஒரு கூட்டம், திமுகவின் எடுபிடிகளான சுந்தரவள்ளி, சவுக்குசங்கர் நினைத்தால் நாம் தமிழர் கட்சியை உலுக்கிவிடும் அளவிற்குப் பலவீனமாக உள்ளது என்று ஒரு கூட்டம், பாக்யராசன் அவர்கள் கட்டுப்பாட்டில் சீமான் அண்ணன் என்று ஒரு கூட்டம், சீமான் அண்ணனே இந்திய அதிகாரவர்க்கத்தின் கட்டுப்பாட்டில் என்று ஒரு கூட்டம், இன்னும் எத்தனையோ கூட்டம். என்னைப் பொறுத்தவரை நாம் தமிழர் கட்சி இனமான உணர்வால் உருவானது யார் எந்தக் கூட்டத்தில் இருந்தாலும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நாம் தமிழர் கட்சி வீழாது! தமிழர்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கும் திராவிடமும் ஆரியமும் எதை வேண்டுமானாலும் செய்யும் நாம் தமிழர் தமிழர் விரோதமாய் எதையும் செய்ய முடியாது தமிழர் தேசியம் அதை என்றும் அரணாக இருந்து காப்பாற்றும்!

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!