0

38+1 வெறும் மண்ணு,நீட் விபரீதங்கள்! | #DMK #ADMK #NEETBAN | SRI Durga | @TamilanSankar.com

தமிழர்கள் திராவிட அயோக்கிய கட்சிகளை இனியும் நம்பிக் கொண்டிருந்தால் எத்தனை உயிர்களை நீட் தேர்வுக்கு இழக்கப்போகிறோம் என்று தெரியவில்லை. ஆளும் அரசுக்கும் எதிர்கட்சிக்கும் திராணி இல்லை என்றால் மக்களையாவது மத்திய அரசுக்கு எதிராகப் போராட அனுமதிக்கவேண்டும். ஓ.பன்னீர்செல்வத்திற்குச் சல்லிக்கட்டு போராட்ட வெற்றியை மடைமாற்ற அந்தப் போராட்டத்தைப் பொறுமையாக அனுமதித்த மத்திய அரசு, நீட் தேர்வு போராட்டத்தை அனுமதிக்காது ஏன் என்றால் இந்தப் போராட்டத்தால் யாருக்கும் பலன் இருக்கப்போவது இல்லை. 39 MPக்களை வைத்திருக்கும் தமிழ்நாடு ஆண்டுதோறும் நீட் உயிரிழப்புகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

மக்களுக்காகச் சட்டங்களா இல்லை சட்டங்களுக்காக மக்களா என்று கேட்கும் இழிநிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டுளோம். கல்வியின் அருமை தெரியாத தற்குறிகள் கூட்டம் நாட்டை ஆள அனுமதித்த மக்களின் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது. இனி திமுகவிற்கும் அதிமுகவிற்கும் நீங்கள் போடும் ஓட்டுகள் உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதற்குச் சமம். இந்தத் திராவிடக் கட்சிகள் தமிழருக்கு என்றுமே நன்மைகளைச் செய்யாது, மத்திய அரசு எந்தத் திட்டங்களைப் போட்டாலும் அதில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பது மட்டுமே இந்தக் கட்சிகளின் பிரதான எண்ணமாக இருக்கும், இதற்கு நம்மிடம் பெரிய பட்டியலே உதாரணமாக இருக்கிறது.

பள்ளி கல்லூரி என்று எல்லாவற்றிற்கும் விடுமுறை கொடுத்துவிட்டு நீட் தேர்வை இவ்வளவு கடுமையாக நடத்தவேண்டிய தேவை என்ன, உங்கள் நோக்கம் தான் என்ன… அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட இது போன்ற அனுமதி தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் வேலையில் மக்களைக் கசக்கி பிழியும் பாசிச பாரதீய சனதாவின் தாளத்திற்கு 39 MPகளும் எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் ஆடுவது எவ்வளவு கேவலம், இவர்களா நமது பிரதிநிதிகள்.

கொரோனா தடையுத்தரவால் தமிழ்நாடு முழுவதும் இருந்து JEE எழுதாதால் 55 சதவிகித தமிழர்கள் மத்திய அரசின் உயர் படிப்புகளில் இணைய வழியில்லாமல் கல்வி உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் நீட்டை மட்டும் கனகட்சிதமாக நடத்தியுள்ளனர். கொரோன பரவும் என்று உலகமே மூச்சை பிடித்துக் கொண்டிருக்கும் போது நீட்டை நடத்தியுள்ளனர். இதுவரை நமக்குத் தெரிந்து மருத்துவர் அனிதா தொடங்கி ஆறு உயிர்கள் நீட் தேர்வால் பறிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் தேர்வு எழுதும் முன்னரே சிறீ துர்கா என்கின்ற இளம்பெண் தன் இன்னுயிரை இழந்திருக்கிறார். திமுக,அதிமுகப் போன்ற முதுகெலும்பில்லா அரசியல் கட்சிகளால் எந்த மாற்றமும் தமிழர்களுக்கு நிகழப்போவது இல்லை. பாசிச பாரதீய சனதா ஆட்சி மத்தியில் மாறினாலும் இந்தத் திராவிடக் கட்சிகள் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்காமல் தெளிவாகப் பார்த்துக் கொள்வார்கள். தமிழர்கள் கேள்வி எழுப்புங்கள் இல்லை நீங்கள் இறந்தவர்கள் என்று அவர்கள் குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!