0

நீட் சூர்யா சிறப்பான கேள்வி | #IStandWithSurya | @TamilanSankar.com

என்னங்க தப்பு நடிகர் சூர்யாவின் கேள்வியில், சாமானியர்கள் எந்தக் கேள்வி கேட்டாலும் யாரும் பதில் சொல்வதில், திரைப்படத் துறையில் பிரபலமான நடிகர் ஒருவர் கேட்டதும் கச்சை கட்டிக் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அஃது இதுவென்று பரபரப்பு கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டின் சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய கட்சிகள் தேர்தலுக்குத் தாயாராகிக் கொண்டிருக்கும் போது வேறு யார் தான் குரலெழுப்புவது.

நடிகர் சூர்யாவின் அறிக்கை

நடிகர் சூர்யாவின் நீட்டுக்கு எதிரான அறிக்கையைப் படிக்கும் எவரும் அதில் பொதிந்து இருக்கும் ஆழமான கேள்விகளைக் கடந்து செல்லமுடியாது. கல்வியாளர்கள் எழுப்ப வேண்டிய இந்தக் கேள்வியைத் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகர் கேட்கும் நிலையில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். #IStandWithSurya என்கின்ற Hashtag கீச்சில் முன்னணியில் இருக்கிறது, இன்னும் நாம் சினிமா மோகத்தில் இருந்து வெளியே வரவில்லை என்கின்ற துயரம் இதில் இருந்தாலும் சமூக அக்கறைக்காக நடிகர் சூர்யாவிற்கு ஆதரவளிப்பது நமது முக்கியக் கடமையாகிறது.

தமிழ் மாணவர்களைக் காக்க வேண்டிய அரசாங்கங்கள்!

தமிழ்நாட்டில் தமிழர் நலன் என்று வரும் நபர்கள் தமிழர் பிரச்சனைகளை மடைமாற்றித் தமிழர்களைக் குழப்பி மீண்டும் மீண்டும் தமிழர்களிடம் போக்கு காட்டி தப்பித்துக் கொள்கின்றனர். வீரியமாய்த் தமிழர்களைத் தமிழ் மாணவர்களைக் காக்க வேண்டிய அரசாங்கங்கள் நீட் தேர்வு முறைகளால் மாணவர்களுக்குப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளனர். சுப்பனும் குப்பனும் ஒரு காலத்தில் படிக்க முடிந்தது இன்று அது கேள்விக்குறியாகி இருக்கிறது. தேர்வு தோல்விகளில் மாணவர்கள் இறப்பது சாதாரண விடயம் தானே என்று அண்ணாமலை IPS பேட்டி கொடுக்கும் நிலையில் அவரைத் தமிழ்நாட்டின் முதலைமைச்சராக்க பாரதீய சனதா முயற்சிக்கிறது, இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது.

தமிழர்கள் விளக்கெண்ணெய் தடவி நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கவில்லையென்றால் நமக்கு அடுத்தடுத்து ஏமாற்றமே நிகழும், நடிகர் சூர்யா போல் பலர் குரல் எழுப்பவேண்டும் நீட் தேர்வு மரணங்கள் தடுக்கப்படவேண்டும்.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!