0

தமிழ்நாட்டை இறுக்கும் திமுக இந்துத்துவா பாம்புகள் | DMK and BJP both poison | @TamilanSankar

தமிழர்கள் இரு வேறு கருத்துக்களைப் பரப்பித் தங்களுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஈவேரா பிம்பத்தைத் தகர்த்தால் இந்துத்துவம் வந்து விடும், திமுகவிற்கு வாக்களிக்கவில்லை என்றால் பாரதீய சனதா வந்துவிடும் எனும் போலி வாதத்தைச் சிலர் திணித்துக் கொண்டிருக்கின்றனர். இது போன்று இன்று மட்டும் பேசவில்லை செயலலிதா இறந்த பிறகு நடந்த எல்லா இடைத்தேர்களிலும் இதே பரப்புரை தான். திமுகவிற்கு ஒட்டு போட்டு தான் இந்துத்துவாவை தடுக்கவேண்டும் என்றால் இந்துத்துவாவை இரத்தின கம்பளம் வைத்து தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்த நம்ம திமுகப் பிதாமகர் கருணாநிதியை என்ன சொல்வது, அப்படி என்றால் கருணாநிதியின் அரசியல் சாணக்கியத்திற்கு ஏன் இந்தச் சரிவு.

திமுக மற்றும் அதிமுகவின் தமிழர் விரோத, குடிமக்கள் விரோத ஆட்சியை நாம் இத்தனை காலம் பொறுத்துக்கக் கொண்டும் தமிழ்நாட்டைப் பூதம் காப்பது போல் செயலலிதாவும் கருணாநிதியும் தங்கள் முதுமை வரை யாரையும் தங்களைத் தாண்டி வளராமல் பார்த்துக் கொண்டனர். இன்று அவர்கள் இருவரும் அமைத்துக் கொடுத்த கட்டமைப்புகள் பலமாக இருந்தாலும் இந்த இரு கட்சிகளும் எழுபது ஆண்டுக் காலம் மக்களை ஏமாற்றியது வெட்டவெளிச்சமாகிவிட்டது ஒரு கட்சியில் தலைமை யார் என்பதில் பெரும் சண்டை நடக்கிறது இன்னோரு கட்சியில் தலைமையைத் தாங்கி பிடிப்பதில் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் எந்தத் தார்மீக பலமும் இல்லை மத்தியில் ஆளும் இந்துத்துவத்தை எதிர்கொள்ளவோ எதிர்க்கவோ அது தான் உண்மையான உண்மை.

அதிமுக வந்தாலும் திமுக வந்தாலும் இந்துத்துவா தான் அதை இயக்க போகிறது, என்ன சுப.வீ,மதிமாறன்,ஆழி செந்தில்நாதன் போன்றவர்களின் நிலை தான் பிரச்னையாகிவிடும், அதிமுக இல்லை என்றால் திமுக, திமுக இல்லையென்றால் அதிமுக என்று பொழுதை போக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு நாஞ்சில் சம்பத் கதை அவர்கள் கண்ணில் வந்து வந்து போகும் அல்லவா. சித்தாந்தத்தில் வீழ்ந்த திராவிடத்தைத் தூக்கி நிறுத்த இந்துத்துவம் புகுந்துவிடும் என்று மாய்மாலங்கள் செய்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நண்பர் டென்ட்டு கொட்டாய் விக்கி தனது வளையொலியில் தமிழர் நல கூட்டணி சாத்தியமா என்று ஒரு காணொளி போட்டிருந்தார் திராவிட ஆரிய கூட்டு சதியால் வீழ்த்தப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு விடுவு வராதா என அவரைப் போல் பலர் அந்த மனநிலையில் தான் இருக்கிறோம். திருமாவளவன், அன்புமணி, சீமான், ஜவகருல்லா, வேல்முருகன், தமீம்முன் அன்சாரி, தினகரன் என்று தமிழ் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணி அமையாதா என்று ஓர் அரசியல் கணக்கு தமிழர்களின் உள்ளத்தில் வாராமல் எந்தத் தேர்தலும் இனி நகரப்போவதில்லை.

மீண்டும் சந்திப்போம்…

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!