0

உரசி போட்ட சீமானும், திசை திருப்பும் ராஜ்கிரணும்

தமிழர்கள் சாதியிலும் மதத்திலும் பிரிந்திருப்பது யாருக்கு சாதகமோ இல்லையோ திராவிடம் எனும் தமிழர் மறைப்பு அரசியலுக்கு மிகச் சிறப்பாகப் பயன்படுகிறது. சீமானின் வார்த்தைகளில் இருக்கும் கடினத்தன்மையைப் பரபரப்பு அரசியலாகப் பார்த்தாலும், அதில் உண்மை மறைந்திருப்பதை மறுக்கமுடியாது. நடிகர் ராஜ்கிரணுக்கு தன் மதத்தின் மீது இருக்கும் ஈர்ப்பை விடச் சீமான் மேல் இருக்கும் ஒவ்வாமை தான் அவரது பதிவில் வெளிப்படுகிறது.

சீமான் பயன்படுத்திய வார்த்தையை வைத்து அவரைக் கைது கூடச் செய்யலாம் ஆனால் ராஜ்கிரண் பொதுவெளியில் பயன்படுத்திய வார்த்தைக்கு யாரும் வக்காலத்து வாங்க முடியாது.

தமிழ் கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் மதத்தை வைத்துத் திராவிடம் அரசியல் செய்வதைக் கண்டும் காணாமல் இருப்பதற்குப் பல காரணம் இருக்கிறது. திராவிடத்தின் கட்டமைப்புகள் வலுவாய் இருப்பதற்குப் பல முட்டுகள் இருக்கின்றன, அதில் ஒரு முரட்டு முட்டு தான் தமிழ் கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும்.

திராவிடத்தைப் பொறுத்தவரை இந்துத்துவ எதிர்ப்பு நாடகத்திற்குச் சராசரி தமிழ் கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் பகடை காய்கள்(மதத் தலைவர்கள் அனைவரும் திராவிடச் சுமைதாங்கிகள்) அவ்வளவு தான்.

சீமான் உரசிவிட்டதில் தமிழ் கிறித்தவ மற்றும் இஸ்லாமிய சகோதரர்கள் நிச்சயம் விழித்துக் கொள்வார்கள், அதே நேரத்தில் அந்தந்த மதத்தலைவர்களின் கோரிக்கை திராவிடத்தின் வழிகாட்டுதலில் இருக்கும்.

தமிழனை ஒன்று சேர்க்க ஒரே வழி தமிழ் மொழி தான் அதுவும் இன்று தமிழர்களிடம் இல்லை. தமிழா தயவு செய்து தமிழைப் படி.

தமிழன் சங்கர்

வெஞ்சமர் களம் பார்த்த வீரத்தமிழர் இனம்...அடங்கி ஒடுங்கி மாற்றான் துச்சமென நினைத்துப் போடும் அடிமைச் சுதந்திரம் தேவையில்லை எனக்கு!